வெளிநாட்டில் வேலை.... மோசம் செய்த மோசடிக்கும்பல்

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெளிநாட்டிற்கு வேலை வாங்கி தருவதாக பல நிறுவனங்கள் ஆட்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதில் பல நிறுவனங்கள் போலியான வெளிநாட்டில் சென்று சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தை கூறி படித்த மற்றும் படிக்காத இளைஞர்களிடம் பணமபறிப்பு மற்றும் வெளிநாட்டிற்கு ஆட்களை கடத்தல் போன்ற சட்ட விரோத செயலை செய்து வருகின்றனர். இதில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் போலி ஏஜென்ட்டுகள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவர்கள் போலியான பேஸ்புக் ஐடி, போலியான வங்கி கணக்கு, தற்காலிக மொபைல் எண் போன்றவற்றை பயன்படுத்தி பணம் பறித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட கும்பல் ஒன்று டிப்ளோமோ பிஇ என்ஜீனியரிங் படித்தவர்களை வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி ஆயிரகணக்கானோரை ஏமாற்றி வருவதாக டெல்டா மாவட்டத்தில் - அதிர்ச்சி தகவல் ஒன்று உலா வருகிறதுஅப்படி அந்த குழுவைச்சார்ந்த அறியலூர் ராஜேந்திரன், திருச்சி விஜய், மதுரை விஜயகுமார், கிருஷ்ணகிரி மாவட்டம் சாம்பல்பட்டி அலாவுதீன், மற்றும் கரூர் சாரதி கோவை உதயா, ஈரோடு பாவேந்தன், பிரபாகரன், செபாஸ்ட்டின் ஆகியோர் அடங்கிய மோசடிக்கும்பல் சுமார் 300 க்கும் மேற்பட்ட நபர்களிடம் கத்தார் நாட்டில் டெக்னோமார்ட் கான்ட்ராக்டிங் கிளினிங் சர்வீஸ் போன்ற வேலைகள் இருப்பதாகவும் ஹிக்மா, மஹபூப், அல்காமில், பீஸ்டிரேடிங்இருந்து 2லட்சம் முதல் நான்கு லட்சம் என கோடிகணக்கான ரூபாய்களை மோசடி செய்துள்ளதாக தகவல். அதுமட்டுமின்றி கத்தார் நாட்டில் அல் உக்கேர் துமாமா, மத்தார்க தீம் , ஓல்டு ஏர்போர்ட் போன்ற பகுதிகளில் வில்லாக்களை வாடகைக்கு எடுத்து இந்தியாவில் இருந்து அழைத்து சென்று அப்பாவி இளைஞர்களை ஒரு வேளை உணவு மட்டும் கொடுத்து ஓர் அறையில் 50க்கும் மேற்பட்டோர்களை மாத கணக்கில் தங்க வைத்து வேலை வாங்கி தாரேன் என்று கூறி சித்திரவதை செய்து வருகிறார்களாம். இவர்களிடம் சிக்கும் அப்பாவி இளைஞர்கள் அரபு வளைகுடா நாட்டிற்கு புதியவர்கள். ஆகையால் இவர்களுக்கு அந்நாட்டின் லேபர் லா அதாவது தொழிலாளர் சட்டம் தெரியாது என்பதால் இவர்கள் அடைத்து வைத்திருக்கும் வில்லாக்களை விட்டு வெளியே வந்து வேலை தேடும் போது மிகுந்த சிரமத்திலும் ஒரு வேளை உணவு கூட கிடைக்காத நிலையில் தான் இவர்கள் கத்தார் நாட்டில் தவிக்கின்றனராம். சில நேரங்களில் மாலை உணவு மசூதியை தேடி சென்று உண்ணும் அளவிற்கு இந்த மோசடி கும்பல் கத்தார் நாட்டில் அப்பாவி இளைஞர்களை சித்தரவதை செய்து வருகிறதாம். அதே நேரம், வீட்டினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாடு திரும்ப வீட்டில் இருந்து பணத்தை அனுப்ப சொல்லி அதன் மூலம் விமான டிக்கெட் பெற்று நாடு திரும்புகிறோம் என்ற பாதிக்கப்பட்டோர் நம்மிடம் கண்ணீருடன் கூறும் போது நமது நெஞ்சை பதறவைக்கின்றது. இவன்தான் போலியான விசா மற்றும் தங்குவதற்கு உண்டான அனைத்தையும் செய்து தருகிறானாம். மேற்படி மோசடிக்கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் உடனே காவல் துறை அதில் தலையிட்டு இந்த மோசடி கும்பலை பிடிக்க வேண்டும். அதே நேரம் எங்களை போன்று பணத்தை இழந்து கத்தார் நாட்டில் சிக்கி தவிக்கும் அப்பாவி இளைஞர்களை காப்பாற்ற இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் கண்ணீருடன். 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)