ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள பத்திரிகையாளர்கள் - துணை போகிறதா அரசு செய்தித்துறை” என்ற கட்டுரைக்கு விளக்கம், Pராஜன்-காகிதம்

போலி பத்திரிகையாளர்களை களையெடுக்கும் நோக்கத்துடன் ஜூ.வி.எழுதியுள்ள கட்டுரையில் எம் காகிதம் இயக்கத்திற்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை என்பதை முதலில் தெரியப்படுத்திக் கொள்கிறோம் ▪ அக்கட்டுரையில் 51- நாளிதழ்களின் பெயர்களையும் அப்பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய அரசு அங்கீகார செய்தியாளர் அட்டை கணக்கையும் பாக்ஸ் நியுஸ் தான் இப்போது சிற்றிதழ்களுக்கு பிரச்சினை ▪ ஜுவி.வெளியிட்ட கட்டுரையில் வெளியிட்டுள்ள குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் அத்தனைக்கும் இந்த 51 பத்திரிகைகள் தான் காரணம் என்பது போல் மக்கள் மத்தியில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டது என்பதை ஜூனியர் விகடன் உணர வேண்டும்.உணர்ந்திருக்கும் என நம்புகிறோம் ▪ ஜூவியில் 2019-ஆம் ஆண்டு வழங்கிய அரசு அங்கீகார செய்தியாளர் அட்டைகளின் கணக்கின்படி பாக்ஸ் நியூஸில் சில தகவல்களை கூறியுள்ளது ▪ சிற்றிதழ்களில் எழுத துவங்கி நான் இன்றும் சிற்றிதழ்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளேன் என்ற அடிப்படையில் சில விசயங்களை இங்கே பகிர்கிறேன் ▪ ஜூவியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 51 பத்திரிகைகளும் முறையாக வந்து கொண்டுதான் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதுடன் ஜூ.வி.கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் இப்பத்திரிகைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை எம் காகிதம் இயக்கத்தின் சார்பில் உறுதிபட தெரியப்படுத்திக் கொள்கிறேன் ▪ விளம்பர வருமானத்தை மட்டுமே வருமானமாகக் கொண்டு குறுகிய வட்டத்துக்குள் வருகின்ற பத்திரிகைகள் தான் இவைகள் ▪உங்கள் கண்ணில் இப்பத்திரிகைகள் தென்பட்டாதற்கு காரணம் இவைகள் பரவலாக விற்பனையாகும் பத்திரிகைகள் அல்ல, இவைகள் சிற்றிதழ்கள் அதன் சக்தி வளர்ச்சி அவ்வளவுதான்,இன்று முன்னணியில் உள்ள பல பத்திரிகைகளு ஒருகாலத்தில் சிற்றிதழ்களாக வந்தவைகள் தான்,முரசொலி பல காலமாக கையெழுத்து பிரதியாகத்தான் வந்தது என்பதை நினைவூட்டுகிறோம் ▪ டி நகரில் சரவணா ஸ்டோர்ஸ்,ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் கடைகளை குறித்து அறிந்தவர்களுக்கு ஜி,ஆர்,டி.லலிதாஸ் ஜுவல்லரிக் கடைகளை குறித்து அறிந்தவர்களுக்கு அதே பகுதியில் சிறிய அளவில் உள்ள நூற்றுக்கணக்கான ஜவுளி மளிகை,நகைக்கடைகளை குறித்து தெரியுமா!?.அல்லது அப்படி சிறிய அளவில் கடை வைப்பது தவறா.!? ▪ சில்லரை வணிகத்தில் பெரிய நிறுவனங்கள் நிழையும் பொழுது சில்லரை வணிகம் பாதிக்கும் என குரல் கொடுப்பவர்கள் சிற்றிதழ்களின் குரல்வளையை மட்டும் நெறிப்பது ஏன்..!? ▪ பிரிண்ட் மீடியாத்துறையில் அன்னிய கார்ப்பரேட் கம்பெனிகள் முதலீடு செய்ய துவங்கியுள்ள நிலையில்,எதிர் காலத்தில் சிற்றிதழ்கள் தான் நம்நாட்டு பத்திரிகையாக மக்களுக்காக குரல் கொடுக்கும் பத்திரிகைகளாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை ▪ ஜூவி கூறிய குற்றச்சாட்டில் அரசு அங்கீகார அட்டையை முறைகேடாக பயன்படுத்துபவர்கள் சிற்றிதழ்களில் முற்றிலும் இல்லையென நானோ எம் காகிதம் இயக்கமோ கூறவில்லை.அதே நேரத்தில் பெரிய பத்திரிகைகளில் அத்தகையவர்கள் இல்லையென ஜூ,வியும் கூறு முடியாது. ▪தவறு செய்ய முற்படுபவனுக்கு பெரிய பத்திரிகை,சிற்றிதழ் என பாகுபாடெல்லாம் கிடையாது.அதை அவன் எங்கிருந்தாலும் செய்வான் ▪ மற்றபடி பெரிய பத்திரிகைகள் தொடத் தயங்கும் விசயங்களை எல்லாம் சர்வ சாதாரணமாக தைரியமாக எழுதுபவை சிற்றிதழ்கள் தான் என்பதை என்னால் ஆணித்தரமாக கூறமுடியும்,அதுமட்டமல்லாது அவைகள் வெளியாகும் பகுதிகளில் மக்களின் பிரச்சினைகளை அடைப்படை தேவைகளை எழுதி அவைகளுக்கு தீர்வு காண்பவை சிற்றிதழ்களே அன்றி பெரிய பத்திரிகைகள் அல்ல ▪ இன்று பெரிய பத்திரிகைகளின் செய்தியாளர்கள் செய்திக்கு பணம் வாங்கினால் அதற்கு பெயர் ”கவர்” அதையே செய்திக்கு என்று முதலாளி பணம் வாங்கினால் அதற்கு பெயர் “பெய்டு நியூஸ்” ▪முன்பெல்லாம் பத்திரிகையில் எத்தனை பக்கம் செய்தி என ஆசிரியர் குழு முடிவு செய்த பின் மீதமுள்ள இடத்தில் விளம்பரத்தை பிரசுரிப்பார்கள். செய்திக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் ▪ இப்போது பத்திரிகையின் விளம்பர பிரிவு தான் பக்கங்களை முடிவு செய்கிறது,விளம்பரமும் பெய்டு நியூஸும் பக்கத்தை நிரப்பிய பின் மீதமுள்ள இடத்தில் தான் ஆசிரியர் குழு செய்தியை கொடுக்க முடியும்..எல்லாம் பணம்..பணம்..பணம்,இது தான் பெரிய பத்திரிகைகளைன் நிலைமை ▪ ஆனால் சிற்றிதழ்கள் அப்படியல்ல அதை நடத்துபவன் தான் முதலாளி,அவனே தான் தொழிலாளி இது ஒரு சுய வேலை வாய்ப்பு..ஜூவி அவன் சோற்றில் மண்ணை அள்ளிப்போட வேண்டாம் ▪ போலி பத்திரிகையாளர்களை ஒழிக்க புறப்பட்ட ஜூ.வி.சிற்றிதழ்கள் மீது பாய்ந்தது ஏன்? ▪ யானை வேட்டைக்கு கிளம்பிய ஜூவி இந்த பூனைகளை கொல்வது ஏன்?? ▪ புலி வேட்டைக்கு புறப்பட்ட ஜூவி இந்த எலிகளை நசுக்குவது ஏன்? ▪ என்ற கேள்வியுடன் மேலும் சில கேள்விகளை காகிதம் இயக்கம் முன்வைக்கிறது ▪ போலி பத்திரிகையாளர்களை உருவாக்குவதே புற்றீசல்கள் போல் கிளம்பியுள்ள கட்டுபாடற்ற முறையில் பத்திரிகையாளர்கள் சங்கம் என்ற பெயரில் செயல்படும் சில..பல சங்கங்கள் தான் என்பதை ஜூவி.ஏன் சுட்டிக்காட்டவில்லை!? ▪ தமிழக செய்தித்துறை தகவல் உரிமை சட்டத்தில் கொடுக்கப்பட்ட தகவலில் 51 பத்திரிகைகளை மட்டும் பாக்ஸ் செய்தியில் பெயர்களோடும். அவர்கள் பெற்ற செய்தியாளர் அட்டை எண்ணிக்கையும் சுட்டிக்காட்டியுள்ளீர்களே இப்பத்திரிகையைகளை மட்டும் குறி வைப்பது ஏன்!? ▪ உங்கள் பெட்டிச்செய்தியில் உள்ள கணக்குப்படி 2019 -ஆம் ஆண்டு வழங்கஅட்டுள்ள 905 அரசு அங்கீகார செய்தியாளர் அட்டையில் 51 பத்திரிகைகள் பெற்ற 175 அட்டைகள் தவிர 730 அ.அ.செ.அட்டைகள் பெற்ற பத்திரிகைகளின் பெயரையும்,அவர்கள் பெற்ற அ.அ.செ.அட்டைகளின் எண்ணிக்கையும் வெளியிடாதது ஏன்? ▪ அச்சு ஊடகத்தை மட்டும் குறிப்பிட்டு எழுதியுள்ள ஜூ.வி.காட்சி ஊடகத்தை பற்றி குறிப்பிடாதது ஏன் !? ▪ செய்தித்துறை வழங்கிய தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட முழுதகவல்களையும் உங்கள் இணையத்தளத்தில் வெளியிட ஜூ.வி தயாரா..!? ‼ மற்றபடி.. ▪ நீங்கள் குறிப்பிட்ட ABC அமைப்பு சிற்றிதழ்களின் சர்குலேசனை குறித்த கூற இயலாது..அதனால் 2019-ஜனவரி முதல் ஒரு மாற்று ஏற்பட்டை தமிழக செய்திதுறை செய்துள்ளது ▪ அதன்படி சிற்றிதழ்களை தினந்தோறும் அதன் பிரதிகளை செய்தி வெளியீட்டுப்பிரிவு மக்கள் தொடர்பு அலுவலரிடம் கொடுக்க கோரியுள்ளது. அவர் அதை வாங்கி நாளிதழ்கள் வருகை பதிவேட்டில் பதிவுசெய்து வருகிறார் ▪ அச்சடிக்கும் பிரதிகளை மட்டும் தான் சட்டப்படி தெரிவிக்க வேண்டும்,அதை கணக்கெடுக்க சிற்றிதழ்கள் அச்சடிப்பதாக கூறும் அச்சகங்களில் தமிழக செய்தித்துறை ஆய்வு செய்கிறது,அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தவறான தகவல் தந்த பலருக்கு கடந்த ஆண்டு அ.அ.செ.அட்டை வழங்கப்படவில்லை ▪. இதேமுறையைத்தான் ”பிரஸ்பாஸ்” வழங்குவதற்காகவும் வார இருவார,மாதஇதழ் வருகைப்பதிவேடும்,அச்சக ஆய்வுபணிகளும் செய்தித்துறையால் மேற்கொள்ளப்படுகிறது ▪ விற்பனையின் அடைப்படையில் தான் அ.அ,செ.அட்டையோ,பிரஸ் கார்டோ வழங்க வேண்டும் என எந்த சட்டத்திலும்,விதியிலும் கூறப்படவில்லை ▪ எனவே ஜூ.வி.குறிப்பிட்டுள்ள 51 நாளிதழ்களும் முறையாக நேர்மையாக வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்வதுடன் ▪போலி பத்திரிகையாளர்களை களையெடுக்க சிற்றிதழ்களும், எமது காகிதம் இயக்கமும் தொடர்ந்து களத்தில் கரம் கோர்த்து செயல்படும் என்பதை இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறேன்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)