வழக்கறிஞர் பிரகாசம் கொடூர கொலையா.....

நல்லுசாமி ரேவதி பெற்றோர் வைத்த பெயரும், பிணம் என்று மாறுது! விரும்பி அணிந்த துணியும், கந்தல் என்று ஆகுது! பாடுபட்டு சேர்த்த சொத்தும், வாரிசிடம் சேருது! | கூடி வாழ்ந்த மனைவி, கூடவேவா சாகுது? ஓடி, ஆடி உழைத்த உடம்பு, உயிரைவிட்டு கிடக்குது! உயிர் கொடுப்பேன் என்றதெல்லாம், ஊமையாக நிற்குது! சொந்தம் என்று சொல்வதெல்லாம், உனக்கு சொந்தம் இல்லை! நீ வந்த இந்த உலகில், அவன் தந்த உடம்பில் சொந்தம் என்பது ஏதடா? தங்கி செல்லும் வழிப்போக்கனே!!!) -- என்ற இந்த வரிகளுக்கும், இனி நீங்கள் பார்க்கப்போகும் சம்பவத்திற்கும் ஏதோ ஒரு வ கை யி ல் சம் மந்தம் இருக்கும் என நினைக்கின்றேன். -பெண்களை படாது காக்க எத்தனையோ அரசு வகுத்தா லும், உண்மை யிலே பாதுகாப்புக்கு ஆளாவது ஆண்களே! ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண் ணாலே என்ற வரியை சும்மாவா சொன் னார்கள் முன்னோர்கள். தொலைக் காட்சி களில் வரும் சீரியல்களை பார்த்துக்கொண்டு, கள்ளக் காதலனோடு சேர்ந்து கொண்டு கணவனை எப்படி கொல்ல வேண்டும்? என்பதையெல்லாம் மனதில் உறுதிபடுத்திக் கொண்டு திரையில் பார்க்கும் சம்பவங்களை நேரிடையாகவே ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பெரம்பலூரைச் சார்ந்த வழக்கறிஞர் ஒருவர் கோவையில் கொலை செய்யப்பட்டு இறந்திருக்கிற சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது. என்ன நடந்தது? ஏன் அந்த வழக்கறிஞர் கொல்லப்பட்டிருக் கிறார்? என்பதை நாம் விசாரணையில் இறங் கிய போது கிடைத்த தகவல்களை பார்க்கலாம். பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம், அவ்வையார் தெருவைச் சார்ந்தவர் நல்லுசாமி என்பவர் நம்மிடம் கூறும்போது, எனக்கு சசிகலா என்ற அக்காவும், பிரகாசம் என்ற தம்பியும் இருந்தனர். எனது தந்தை சுப்ரமணியன் 33 வருடங்களுக்கு முன்பும், தாயார் மஞ்சுளா 16 வருடங்களுக்கு முன்பும் இறந்து விட்டனர். எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனது தம்பி பிரகாசம் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு முடித்து பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கோவை மாவட்டம், நாகராஜ புரத்தைச் சார்ந்த என் மாமன் சிவநாதன் மகள் ரேவதி என்பவரை கடந்த 05.07.2012 தேதியன்று எனது தம்பி பிரகாசத்திற்கு திருமணம் செய்து வைத்தோம். திருமணம் நடந்த முதல் நாளிலிருந்தே என் தம்பியை ரேவதிக்கு பிடிக்காததால் ரேவதி அவரின் அம்மா வீட் டிற்கு சென்று விடுவதும் , ப்பி ரேவ தியை அழை - த்து வருவதும் இப்படியே நாட்கள் நகர்ந்த து - இந்நிலையில் ஒரு வருடத் திற்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் என் தம்பி சென்றபோது, வி ப த் து ஏற்பட்டதில் இரண்டு கால் விரல்களிலும், இரண்டு கை விரல்களிலும் இரத்த காயம் பட்டு சதை கிழிந்து, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனது தம்பியின் மனைவி ரேவதி என் தம்பியோடு குடும்ப உறவில் ஈடுபாடு இல்லாமல் இருந்து வந்திருக்கிறார். ஒருமுறை ரேவதி என் தம்பியின் டைரியில் எனது கணவரோடு வாழ பிடிக்கவில்லை என்றும், என்னுடைய அப்பா, அம்மா கட்டாயப்படுத்தியதால்தான் திருமணம் செய்து கொண்டேன் என்றும் எழுதி வைத்துவிட்டு, தன் அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன்பிறகு, இரண்டு வருடங்கள் ரேவதி பிரிந்து வாழ்ந்தார். பிறகு மீண்டும் சமரசம் செய்து சேர்ந்து இருந்தனர். ஆனாலும் எனது தம்பி மனைவி ரேவதி அடிக்கடி பிரிந்து அவருடைய அம்மா வீட்டிலேயே இருப்பதால், அடிக்கடி மனை வியை பார்க்க எனது தம்பி கோவைக்குச் சென்று வருவான். இந்நிலையில், எனது அத்தை மகன் ஸ்ரீதர் என்னுடைய தம்பி பிரகாசத்தை 01.12.2019 அன்று எனது வீட்டிலிருந்து திருப்பூருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். திருப்பூரில் உள்ள எனது மாமா சேகர் வீட்டில் 03.12.2019 வரை என் தம்பி தங்கி இருக்கிறார். அப்போது என் தம்பியை அவரது மாமியார் ராஜேஸ்வரி போன் செய்து உடனே தன் வீட்டிற்கு வருமாறு கூறியிருக்கிறார். என் தம்பி பிரகாசம் அவரது மனைவி ரேவதி வீட்டில் 04, 05, 06.12.2019 ஆகிய மூன்று தேதிகளில் தங்கியிருக்கிறார். இந்நிலையில், 07.12.2019 அன்று மதியம் 01.00 மணிக்கு திடீரென்று எனது தம்பி பிரகாசத்தின் மாமியார் எனக்கு போன் செய்து, என் தம்பி பிரகாசம் இறந்து விட்டதாக கூறினார். உடனே, எனது உறவினர்களோடு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது ஒரு ஆம்புலன்சில் எனது தம்பியின் பிரேதத்தை வைத்திருந்தனர். அங்கிருந்த எனது தம்பியின் மாமியாரின் உறவினர் ஒருவர் என்னிடம் கூறும்போது, பிரகாசத்தின் உடம்பு தரையில் முட்டிப் போட்டு அமர்ந்தபடி ஒரு சிறிய மரக் கிளையில் சொட்டுநீர் குழாய் வயரால் கழுத்தில் மாட்டியபடி தொங்கிக் கொண்டிருந்த செல்போன் புகைப்படத்தை எனது உறவினர்களுக்கு வாட்ஸ்அ ப்பிற்கு அனுப்பினார். இதனை பார்த்த நானும், எனது உறவினர்களும் அதிர்ச்சி அடைந்து விட்டோம். ஏனெனில், எனது தம்பி இறந்த புகைப்படத்தை பார்த்தபோது, எனது தம்பியை இரவில் யாரோ கொலை செய்து ஒரு மரக்கிளையில் அதிகாலையில் (07.12.2019ம் தேதியில் அதிகாலை 03.00 மணி அல்லது 04.00 மணி அளவில்) தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது போல் ஒரு வயரில் தொங்கவிட்டுள்ளது தெரிய வந்தது. எனவே, தம்பி தற்கொலை செய்யும் அளவிற்கு கோழையில்லை. அவர் திறமைமிக்க வழக்கறிஞராக பணிபுரிந்தவர். இதுபற்றி, நானும், எனது அக்கா சசிகலாவும் கோவை பெத்தனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றபோது, அதற்கு முன்னதாகவே ரேவதி புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். எனது தம்பி பிரகாசம் கோவையிலிருந்தபோது, நெருக்கமான உறவினர்கள் யாரோ கொலை செய்து வழக்கிலிருந்து தப்பிக்க நினைத்து பிரகாசம் தற்கொலை செய்து கொண்டதுபோல் நாடகமாடியுள்ளனர். பெத்தனூர் காவல்நிலைய குற்ற எண்.1030/2019ல் 174 சிஆர்பிசி என்று போடப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். எனது தம்பியின் சாவிற்கு காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் பிரகாசத்தின் அண்ண ன் நல்லுசாமி. வழக்கறிஞர் பிரகாசத்தின் இறப்பின் மூலம் நமக்கு ஏற்படுத்தி இருக்கின்ற சந்தேகம்? பிரகாசம் இறந்த நிலையில் உள்ள செல்போன் புகைப்படத்தில் கழுத்தில் காணப்படும் முடிச்சு கழுத்தை இறுக்கவில்லை. முடிச்சு கழுத்தைவிட்டு அரை அடி தள்ளிப் போடப் பட்டுள்ளது. இரண்டு கால்களும் தரையில் முட்டிபோட்டு, அமர்ந்து, தலை சாய்ந்து, கண்கள் தூங்குவது போல் உள்ளது. இரண்டு கைகளும் பக்கவாட்டில் தொங்கவிடாமல், இரண்டு தொடைக்கும் நடுவில் உள்ளது. பிரகாசத்திற்கென்று, அவருடைய சட்டைகள், பேண்ட்டுகள் மனைவி ரேவதியின் வீட்டில் பீரோவில் உள்ளபோது, மாமனார் சிவநாதன் சட்டையும், பேண்ட்டும் பிரகாசத்தின் உடம்பில் இருந்தது எப்படி? ஏற்கெனவே பிரகாசத்திற்கு விபத்து ஏற்பட்டதில் இரண்டு கை, கால் விரல்களிலும் கடுமையான காயம் ஏற்பட்டு புண்கள் ஆறாமல் இருந்தது. கால் விரலில் ஏற்பட்ட காயத்திற்கு, இறக்கும் நாள்வரை கட்டுப்போட்டு சிகிச்சை எடுத்து வந்து கொண்டிருக்கிறார். அதனால் வெளியில் எங்கு சென்றாலும், செருப்பை கழற்ற மாட்டார். ஆனால் தூக்கு மாட்டி யிருந்த இடத்திற்கு சற்று தள்ளி இரண்டு செருப்புகளும் கிடந்துள்ளது. இறந்துபோன பிரகாசத்தின் இரண்டு கை விரல்களிலும் ஒரு வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட விபத்தின் போது இரத்த காயம் ஏற்பட்டு, சதை கிழிந்த நிலையில் கட்டுப்போட்டு சிகிச்சை பெற்றவர். இரண்டு கை விரல்களிலும் புண்கள் ஆறிய நிலையில் கை விரல்களை சரியாகவும், முழுமையாகவும் அவரால் நடக்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில் பிளாஸ்டிக் போன்ற கேபிள் ஒயரால் தூக்குப்போட முடிச்சு போட்டது நம்பும்படியாக இல்லை. பிரகாசம் தொங்கிய நிலையில் இருந்த மரக்கிளை தாழ்வாக உள்ளது. அவருடைய - உயரத்திற்கு நின்றால் தரையை முட்டும். பொதுவாக, யாரேனும் ஒரு நபர் தற்கொலை செய்து கொண்டால், உயிர் பிரியும் நிலையில் கை, கால்களை உதறியும், உடம்பை ஆட்டியும் துடிதுடித்தும் இறப்பார்கள். அவ்வாறு இறந்த (இடத்தில்) இடமோ போர்க்களம் போல் காணப்படும். புஜீரகாசம் தரையில் முட்டிப் போட்ட நிலையில் தற்கொலை செய்திருந் தால் அந்த மண்தரையில் உள்ள புல் மற்றும் செடிகள் கசங்கிய நிலையில் அல்லது களைந்த நிலையில் காணப்படும். ஆனால் தரையில் புற்களும், செடிகளும் முழுமையாக அப்படியே உள்ளது. மேலும் வழக்கறிஞர் பிரகாசம் அவர்களை படுகொலை செய்து தூக்கில் மாட்டிவிட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்கும் போலீசாரைக் கண்டித்தும் கோவை பெத்தனூர் காவல் நிலையத்தில் கடந்த 19.12.2019 அன்று தமிழ் நாடு முற்போக்கு வழக்கறிஞர் கூட்டமைப் பின் சார்பில் மூத்த வழக்கறிஞர் வடக்கலூர் காமராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் ஒன்றுகூடி, முற்றுகை போராட்டமும் நடத்தி யிருக்கிறார்கள். - - நமக்கு கிடைத்த தகவலின்படி, பிரகாசம் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய நபர் அல்ல. அம்பேத்கர் சிந்தனையுள்ள பிரகாசம் துணிச்சலானவர். இந்த விசயத்தில் கோவை போலீசார் சரியான முறையில் விசார ணையை மேற்கொண்டால் பிரகாசத்தின் மனைவி ரேவதி, இவருடைய தந்தை சிவநாதன், தாய் ராஜலட்சுமி ஆகியோருக்கு தொடர்பு இருக்குமோ என்கின்ற சந்தேகம் ஏற்படுகின்றது. உடற்கூறு ஆய்வு அறிக்கை கிடைப்பதற்காக உறவினர்களும், பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வழக்கறிஞர் பிரகாசத்தை திட்டமிட்டு கொலை செய்த அந்த கூட்டம் கூண்டில் ஏற்றப்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.