விதிமீறும் வாகனங்களை சிசிடிவி மூலம் கண்காணித்து அபராதம் விதிக்க முடிவு

செங்கல்பட்டு முதல் திருச்சி வரை கண்காணிப்பு கேமரா வைக்கப்பட உள்ளதாகவும், விதிமீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற 31வது சாலை பாதுகாப்பு வார விழாவில் பங்கேற்று பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரசின் கடுமையான நடவடிக்கையால் தமிழகத்தில் 53 சதவீத சாலை விபத்துகளை குறைத்து உள்ளதாக தெரிவித்தார். நாட்டில் சட்டம் போடுவது முக்கியமல்ல என தெரிவித்த அமைச்சர், தனிநபர் ஒழுக்கம் இருந்தால்தான் நாட்டில் எதையும் சாதிக்க முடியும் என கூறியுள்ளார்.