குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வயநாட்டில் நடந்த பேரணியில் ராகுல் பேச்சு

சி.ஏ.ஏ. (குடியுரிமை திருத்தச் சட்டம் ) மற்றும் என்.ஆர்.சி. (தேசிய குடிமக்கள் பதிவேடு) இளைஞர்களுக்கு வேலை வாய்ப் பை பெற்றுத் தராது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். கேரள மாவட்டம் வயநாட்டில் இன்று (30-01-2020) குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நடைபெற்றது. இதில் வயநாடு தொகுதி எம்பி. ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.


அப்போது அவர், பிரதமர் நரேந்தி- மோடியம், நாதுராம் கோட்சேவும் ஒரே சித்தாந்தத்தை நம்புவதாக கூறினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: நன்றாக கவனித்து பாருங்கள், எப்போதெல்லாம் மோடி யிடம் வேலைவாய்ப்பின்மை மற்றும் வேலைகள் குறித்து கேட்கும் போது அவர் உடனடியாக சுவனத்தை திசைதிருப்பி விடுவார். என்ஆர்சி யோ, சிஏஏ வோ வேலைவாய்ப்பை பெற்று தராது. காஷ்மீரில் உள்ள சூழலும், அசாம் பற்றி எரிவதும், நமது இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தராது.


தான் இந்தியன் என்பதை நிரூபிக்க இந்தியர்களால் முடியும். நான் இந்தியனா இல்லையா என்பதை முடிவு செய்ய நரேந்திர மோடி யார்? யார் இந்தியன், யார் இந்தியன் இல்லை என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது.


நான் இந்தியன் என்பது எனக்கு தெரியும். அதை நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை. "ஒவ்வொரு மனிதரும் தங்களது சொந்த நம்பிக்கையைப் பின்பற்றுவது பற்றிய மகாத்மா காந்தியின் கருத்தைபிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை.


இந்தியாவின் வலிமை என்னவென்று அவருக்கு தெரியாத அளவுக்கு அவர் மனம் கோபத்தால் நிறைந்துள்ளது. நரேந்திர மோடியும் நாதுராம் கோட்சேவும் ஒரே சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். அதில் எந்த வித்தியாசமும் இல்லை. பிரதமர் மோடி தான் கோட்சேவை நம்புவதாகக் கூற தைரியம் இல்லை என்று கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்