மோடி அமித்ஷா மோதல் ஆரம்பம்!

"இவர்கள் இருவருக்கும் இடையே உரசல் வர வாய்ப்பே இல்லை என்று அடித் துச் சொன்னவர்கள் கூட, ஒருவேளை அப்படியும் இருக்குமோ, அரசியல் - அதிபா கார விஷயத்தில் எதுவும் நடக்கலாமோ என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்பதை அடிப்படையாக வைத்துதான் டெல்லியில் தொடங்கி இந்தியா முழுவதும் மேற் கொண்ட கேள்விகளும் வியூகங்களும் எழுந்து வருகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்த நிலையில், ஒரே ஆண்டில் ஐந்தாவது மாநிலமாக ஜார்க்கண்ட் மாநிலத் தில் ஆட்சியை இழந்திருக்கிறது பாஜக. மோடி - அமித்ஷா மேஜிக் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியானா, மகாராஷ் டிரம், ஜார்கண்ட் என்று சொதப்பி வருகிறது. இந்த நிலையில் தேசிய குடிமக்கள் பதி வேடு பற்றி பொதுமேடைகளில் பிரதமரின் கருத்தும், அமித்ஷாவின் கருத்தும் முற்றி லும் எதிர் திசைக்குச் சென்றதை பா.ஜ.க. வினர் ஆச்சரியத்தோடு பார்த்தனர். முதலில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படும். அதைப் பின் தொடர்ந்து நாடு முழுதும் தேசியக் குடிமக்கள் பதிவேடு கொண்டுவரப்படும். ஊடுருவல்காரன் ஒருத்தனும் இங்கே இருக்க முடியாது, தூக்கி வெளியே போட்டுவிடுவோம்' என்று நாடாளு மன்றத்தில் மட்டுமல்ல ஜார்க் கண்ட் மேடைகளில்கூட அமித்ஷா தனக்கே உரிய உறுதியான மொழியில் பேசினார். அதிபா .ஜ.க. செயல் தலைவர் நட்டாவும் இதையேதான் பேசினார். ஆனால், டெல்லி ராம் லீலா மைதானத்ல் பிரதமர் மோடி பேசுகையில், 'என்ஆர்சி என்பது எங்கள் திட்டத்திலேயே இல்லை' என்று அறிவிக்கஅமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க.வில் பலருக்கே அதிர்ச்சி. 2019 தேர்தல் அறிக்கையிலேயே இதுபற்றி நாம் சொல்லியிருக்கிறோம்ஆனால், பிரதமர் மாற்றிச் சொல்கிறாரே என்று கட்சிக்குள்ளேயே விவாதம் ஏற் பட்டது ஆனால், சென்னையில் பேட்டி யளித்த தேசிய செயலாளர் முரளிதர் ராவ்'பிரதமர் அந்த அர்த்தத்தில் சொல்ல வில்லை. ஆனாலும் கட்சியின் நிலைப்பாடு என்பது என்ஆர்சி நாடு முழுவதும் கொண்டு வரவேண்டும் என்பதுதான்என்றார். அதேபோல மபி முன்னாள் முதல் வரும் பா.ஜ.க.வின் முக்கிய மூத்த தலைவர் களில் ஒருவரான சௌகானும், 'கட்சியின் முடிவு என்பது என்.ஆர்.சி. வேண்டும் என்பதே என்றார். இந்த நிலையில் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.யை உடனடியாக அமல்படுத்துவதில் மோடிக் கும், அமித் ஷாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள். இரண்டா வது முறையாக ஆட்சிக்கு வந்து ஆறு மாதத்துக்குள் காஷ்மீர் 370 ரத்தாகி விட்டது, ராமர் கோயிலுக்கான உச்ச நீதி மன்றத் தீர்ப்பு வந்துவிட்டது, அடுத்து தேசிய குடிமக்கள் பதிவேடு, வெளிநாட்டு சட்ட விரோத குடியிருப்பாளர்களுக்கு சிறப்பு தடுப்பு முகாம்கள் என்று வேகவேக மாக உள்துறை அமைச்சர் அமித் ஷா செயல்பட்டுக் கொண்டிருந்தார். கடந்த பட்ஜெட் தொடர், நடந்து முடிந்த இந்தத் தொடர் என நாடாளுமன்றத்தில் அமித் ஷாவே மையமாக செயல்பட்டு வருகிறார். மோடிக்கு அடுத்த இடம் என்று வர்ணிக் கப்பட்டவர், இன்று மோடிக்கு இணையாக ஏன் மோடியை விட ஒருபடி மேலே வைத் தும் கட்சியினரால் பேசப் பட்டு வருகிறார். இதெல்லாம் மோடிக்குள் என்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்குமோ தெரிய வில்லை. நாட்டில் இத்தனை விவாதங்களைக் கிளப்பியிருக்கும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது அந்த மசோதாவுக்கு ஆதரவாக மோடி ஓட்டுப் போடவில்லை என்கிறார்கள். இதுபற்றி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பொது மேடைகளிலேயே, 'இது நல்ல மசோதா என்கிறீர்கள். ஆனால் பிரதமரான நீங்களே ஏன் இந்த மசோதாவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க வில்லை?' என்று பகிரங்கமாக கேட்டு வருகிறார். பிரதமர் சிஏபிக்கு ஆதரவாக வாக்களிக்க வில்லை என்று மம்தா பகிரங்க மாக சொல்லியும் அதற்கு எந்த பதிலும் இதுவரை வரவில்லை. ஊடகங்களும் இது குறித்து பெரிதாக எழுதவோ, விவாதிக்கவோ இல்லை .) இப்போதைக்கு சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. வேண்டாம் என்பது மோடியின் கருத்து. ஆனால் அது அமித்ஷாவால் ஏற்கப்பட வில்லை . எனவேதான் தன் கருத்தை வலுப்படுத்தும் விதமாக டெல்லி பொதுக் கூட்டத்தில், 'என்.ஆர்.சி. இப் போதைக்கு இல்லை' என்று பேசிவிட்டார் மோடி. இதன்பின் நடந்த அமைச்சரவைக் கூட் டத்திலும் என்.ஆர்.சி. பற்றி எதுவும் குறிப்பிடா மல் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என்.பி.ஆர். பற்றி விவாதிக்கப் பட்டிருக்கிறது. இதன் பின்னர் பேட்டி யளித்த உள் துறை அமைச்சர் அமித்ஷா, “தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் (என்.ஆர்.சி.) தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கும் (என்பிஆர்) எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி கூறியது முற்றிலும் சரியானது. என்ஆர்சியை நாடு முழுவதும் நடை முறைப்படுத்துவது குறித்து நாடாளு மன்றத்திலோ அல்லது மத்திய அமைச் சரவையிலோ எந்த வகை யிலும் விவாதிக்கப்படவில்லை. என்.பி.ஆருக்கு மேற்கு வங்க, கேரள முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவர்களிடம் நான் பணிவுடன் கேட்பது என்னவென்றால் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்காதீர்கள். அவர்கள் இருவரும் முடிவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். இருவரின் அரசியல் காரணங் களுக்காக, ஏழைகளுக்கு வளர்ச்சித் திட்டங்கள், உதவிகள் கிடைக்காமல் போய் விடும்” என்று தன் வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டுப் பேசி யுள்ளார். இப்போதைக்கு மோடியின் நிலைப் பாடு அவர் பிரதமர் என்பதால் மத்திய அரசுக்குள் வெற்றிபெற்றிருக்கிறது. ஆனால் கட்சித் தலைவராக அமித் ஷாவே இருக்கிறார். பாஜகவின் கொள்கையே நாடு, கட்சி, அதன் பிறகே தனி நபர் என்பதுதான். எனவே மோடிக்கும், அமித்ஷாவுக்குமான இந்த கருத்து மோதல் இப்போது லேசாக தெரிய ஆரம்பித்திருக்கிறது. விரைவில் இது வெளிப்படையாகவே தெரியவரும் என்பதே பா.ஜ.க.வின் தற்போதைய நிலவரம்? பிரதமர் மோடி டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "எதிர்க் கட்சிகள் பொய்களைப் பரப்பி வருகின்றன. என்ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு என்பதைப் பற்றி 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்தது முதல் இப்போது வரை எங்கேயும் பேச வில்லை, விவாதிக்க வில்லை ” என்று கூறி யிருந்தார். இந்நிலையில் பிரதமரின் பேச்சு உண்மைக்கு மாறான பொய்களின் தொகுப்புரையாக அமைந் திருந்தது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் குழு தெரிவித் துள்ளது. இதுபற்றி பிரதமரின் பொய்கள் என்று அக்கட்சி பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, “நான் 130 கோடி இந்திய குடி மக்களுக்கு சொல்ல விரும்புகிறேன், எனது அரசு அதிகாரத்துக்கு வந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து என்.ஆர்.சி குறித்து இன்று வரையில் ஒருமுறை கூட பேசவில்லை என்று பிரதமர் கூறியிருக்கிறார். ஆனால், பாஜக, 2019 ஆம் ஆண்டில் தனது தேர்தல் அறிக்கை யில் நாடு முழு வதும் என் ஆர்.சி அமலாக் கப்படும் என உறுதியளித்திருந்தது. நாட்டின் உள் துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது, மக்களவையில் நவம்பர் 9 அன்று, "நாடு முழுவதும் என்.ஆர்.சி கொண்டுவந்து அமலாக்கு வோம், ஊடு ருவிய ஒரே ஒருத்தரைக் கூட விட்டுவைக்க மாட்டோம்” என்று பேசினார். என்.ஆர்.சி திட்டம், என்.பி.ஆர் என்ற மக்கள் தொகை பதிவேட்டு வேலைகள் (ஏப்ரல் 1 - செப்டம்பர் 30, 2020) முடிந்த பிறகு தொடங்கும். என்.பி.ஆர். என்பது என்.ஆர்.சி திட்டத்தின் முதல் கட்டம். அரசிதழில் இது கடந்த 2019 ஜூலை 31 அன்று வெளியிடப்பட்டது. அடுத்ததாக, “நாட்டில் தடுப்பு முகாம் கள் எங்கேயும் இல்லை” என தெரிவித்தார் மோடி. கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி மாநிலங் களவையில் உள்துறை அமைச்சரிடம் எழுப் பப்பட்ட கேள்விக்கு சொன்ன பதிலில், "அனைத்து மாநிலங்களிலும் சட்ட விரோத குடியேறிகள் மற்றும் தண்டனை உறுதி செய்யப்பட்டு நாடு கடத்தப்பட வேண்டிய அந்நியர்களையும் அடைப்பதற்காக தடுப்பு முகாம்களை கட்ட வழி காட்டுதல்கள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் மத்திய அரசு கடந்த ஜனவரி 9 அம் தேதி, தடுப்பு முகாம்கள் கட்டுவது பற்றிய வழிகாட்டுதல்களின் தொகுப்பினை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியிருக்கிறது. மத்திய அரசு கடந்த நவம்பர் 28 ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில், 'நம் நாட்டில் சட்டவிரோதமாக வாழும் அந்நிய தேசத்தவர்களுக்கான தடுப்பு முகாம் அமைப்பதற்கு அனைத்து மாநில அரசாங் கங்களுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு கடிதமும், 2018 ஆம் ஆண்டு அந்தப் பணிகளின் நிலை அறிய ஒரு கடிதமும் எழுதப்பட்டது' என தெரிவித்தது. கடந்த நவம்பர் 2019ல், உள் துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும்போது அசாம் தடுப்பு முகாம்களில் குடியேறி களாக சந்தேகிக்கப்படுவோர் தடுத்து வைக்கப் பட்டு அதில் 28 பேர் மரணமடைந்திருப்ப தாக தெரிவித்தார். 988 அந்நியர்கள் அசாமில் உள்ள தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் எண்ணிக் கையை வெளியிட்டார். 2014 ஏப்ரல் 24/29 ஆகிய தேதிகளிலும், 2014 செப்டம்பர் 9/10 ஆகிய தேதிகளிலும் வழிகாட்டுதல்கள் இந்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து அனுப்பப்பட்டன. அவற்றை அடிப்படை யாக கொண்டு மாதிரி தடுப்பு முகாம்கள்/ தங்கும் மையம்/முகாம் மாதிரி ஆகியவை அனைத்து மாநில/யூனியன் பிரதேசங்களுக் கும் 2018ல் அனுப்பப்பட்டது." என்றும் மார்க்சிஸ்ட் கட்சி தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதாவது பிரதமர் மோடி ராமலலா மைதானத்தில் பேசியதற்கு முரண பாடாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவே நாடாளு மன்றத்தில் பேசியிருக்கிறார். அவை ஆவணங்களாக அவைக் குறிப்பு களில் பதிவாகியிருக்கின்றன. இந்நிலையில் மோடியின் பேச்சு உண்மைக்குப் புறம் பானது என்பதை அமித்ஷாவின் நாடாளு - மன்ற உரைகளின் மூலமே எடுத்துக் காட்டி யிருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. மேலும், நான் யாருடைய மதத்தையும் குறிப்பிட்டு பேசியதே இல்லை என்றார் மோடி. ஜார்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தோ நடைபெற்ற தேர்தல் பேரணி பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, வன்முறையில் ஈடுபடுவோர் யார் என்பதை அவர்களு டைய உடையை வைத்துக் கண்டுபிடிக்க முடியும் என்றார். 2019 பொதுத்தேர்தலில் மோடி, வயநாடு தொகுதியை ராகுல் காந்தி தேர்ந்தெடுத்திருப்பதற்கு காரணம் பெரும் பான்மைகள் சிறுபான்மையாக உள்ள தொகுதி” என்றார் என்று பட்டியலிட் டிருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!