மத்திய அரசுக்கு பயந்த அடிமை அரசு அ.தி.மு.க - துரைமுருகன் சாடல்!

மத்திய அரசுக்கு பயந்த அடிமை அரசாக உள்ளது அ.தி.மு.க - துரைமுருகன் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அதிமுக அஞ்சுகிறது; மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாத அடிமை அரசாகவே அதிமுக உள்ளது என தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு!குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தீர்மானம் கொண்டுவராததால் சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு செய்துள்ளது. சட்டப்பேரவையில் தி.மு.க. வலியுறுத்தல்! திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட சென்னகுணம், மணம் பூண்டி நியாயவிலைக் கடைகளை பிரித்து பகுதிநேர நியாய விலைக் கடை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார்.அதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, முதலமைச்சரின் சிறப்பு கவனத்திற்கு கொண்டுச் சென்று இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.வேளச்சேரி காந்தி சாலையில் உள்ள ஐஐடி நிறுவனத்தின் 3வது நுழைவு வாயிலை மாணவர்கள் நலன் கருதி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. உறுப்பினர் வாகை சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையின் இன்றையக் கூட்டம் தொடங்கியது! தமிழக சட்டப்பேரவையின் 4வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெ.கருணாமூர்த்திக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை