மெரினாவில் திரண்டிருந்த மக்களிடையே, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்கேக் வெட்டி கொண்டாட்டம்

சென்னை மெரினாவில் திரண்டிருந்த மக்களிடையே, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டினார்.அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த அவர், புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட வேண்டுமெனவும் அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுவதோடு பாதுகாப்பாக வீடு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மதுரவாயல், பூந்தமல்லி ,போரூர், குன்றத்தூர் ஆகிய பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பயணிகள் பாதுகாப்பாக வாகனத்தை இயக்குமாறு அவர்கள் அறிவுறுத்தினர். அதுபோல் கிழக்கு கடற்கரை சாலைப்பகுதிகளிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் ஏராளமான போலீசாருடன் பொதுமக்களும் பங்கேற்றனர்.