ஜூனியர் விகடனே ஓடி ஒளிந்த உனது நிருபர் பரக்கத்அலி எங்கே ....

கடந்த சில நாட்களாக பத்திரிகைதுறை குறித்த மூன்று விசயங்களை ஒன்றாக போட்டு குழப்பி பல கருத்துக்கள் செய்திகள் சமூக வலைத்தளங் களில் வலம் வருகிறது அதற்கு ஒரு விளக்கம் தருவதற்காகவே இப்பதிவு 1) சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன். மாணிக்கவேல் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில், பத்திரிகையாளர் என்ற பெயரில் ஒருவர் பொது நலவழக்கு தொடுக்கிறார், அவரின் பின்னணி குறித்து நீதிமன்றம் அறிந்து பத்திரிகை யாளர்கள் யார்... என்பது குறித்து வரையறை தேவை எனக் கூறி சில நடவடிக்கை களை எடுத்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு உண்மையான பத்திரிகையாளர்கள் எவரும் அச்சம் கொள்ள தேவை யில்லை . 2) அக்ரடேஷன் கமிட்டி அமைக்காமல் அரசு அங்கீகார அட்டை வழங்கியதற்கு எதி ரான வழக்கு. இதில் தங்களது தரப்பு விளக்கத்தை அரசு நீதிமன்றத்தில் கூறவுள்ளது. இவ்விசயத்திலும் உண்மை யான பத்திரிகையாளர்களுக்கு எவ்வித பிரச்சினை இல்லை. 3) ஜூனியர் விகடன் பத்திரிகையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கோரி அதற்கு அரசு கொடுத்த தகவலின் அடிப்படையில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது இதிலும் உண்மையான பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் எந்த விசயமும் இல்லை ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கட்டுரையில் 2019 ஆம் ஆண்டு கொடுக்கப் பட்ட அரசு அங்கீகார செய்தி யாளர் அட்டை கணக்கின்படி செய்தி உள்ளது. மொத்தம் 905 அ.அ.செய்தி யாளர் வழங்கியுள்ளதாக கூறும் அக்கட்டுரையில் 51 நாளிதழ் களின் பெயரை வெளியிட்டுள்ளது. 51 நாளிதழ்களுக்கு வழங் கப்பட்டுள்ள அ.அ.செய்தி யாளர் அட்டையின் எண்22ணிக்கை 175,905அ.அ.செய்தி யாளர் அட்டையில் 175 போக மீதி 730 அ.அ.செய்தியாளர் அட்டை களும் வழங்கப்பட் டுள்ளது என்பதும் உண்மை . 730 அரசு அங்கீகார செய்தியாளர்கள் அட்டை பெற்றவர்கள் விபரம் இல்லை. 51 நாளிதழ்கள் பெயரை மட்டும் குறிப்பிடுள்ள ஜூ.வி அச்சு ஊடகப்பெயர்களை மட்டும் வெளியிட்டுள்ள ஜூ.விகாட்சி ஊடக பெயர்கள் எதையும் ஏனோ வெளியிட வில்லை ஜூவி. சுட்டிக் காட்டியுள்ள 51 நாளிதழ்களில் 90 இப்போதும் வெளிவந்து தான் கொண்டுள்ளது ஜூ.வி. குறிப்பிடும் 51 நாளிதழ்களும் சிற்றிதழ்கள், பரவலாக விற்பனை செய்ய வசதியில்லாதவை, விளம்பரங் களை வருமானமாக கொண்டு குறுகிய வட்டத்துக்குள் வெளி வருபவை அதன் காரணமாக ஜூ.வி.யின் பார்வையில் இந்த நாளிதழ்கள் தென்படாமல் போயிருக்கலாம். சிற்றிதழ்கள் என்பதாலும், குறைந்த அளவில் விற்பனை உள்ளதாலும் குறுகிய வட்டத் துக்குள் வெளிவருவதாலும் இந்த 51 நாளிதழ் களுக்கு அரசு அங்கீகார செய்தியாளர் அட்டை வழங்கக்கூடாது என்று எந்த சட்டத்திலும் கூறவில்லை . பத்திரிகை துறையில் அதிகரிக்கும் போலிகளை களையெடுக்க வேண்டும் என்பதில் எந்த பத்திரிகை யாளருக்கும் ஐயமில்லை . நீதிபதி கிருபாகரனும் அதை தான் வலியுறுத்தி உள்ளார். எண்22.12020 தேதியிட்ட அந்த பத்திரிகை இதழில், ஆர்.டி.ஐ. அம்பலம் பகுதியில் சில சிறு குறு பத்திரிகை பெயர்களை குறிப்பிட்டு, ஜூ.வி., எழுதிய விஷயம் பத்திரிகையாளர்களுக்கு கடும் கோபத்தை உருவாக்கி உள்ளது. சமத்துவம் பேசுகிற பத்திரிகையாக தன்னை அடை யாளப்படுத்தி கொள்ளும் ஜூ.வி., பத்திரிகை தொழிலில் பெருமுதலாளிகள் மட்டுமே கோலோச்ச வேண்டும், கோடீஸ்வரர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மேற்படி செய்தியை வெளியிட்டு உள்ளது. இவர்களது எண்ணம், போலிகளை ஒழிப்பதாக இல்லாமல், உழைக்கும் பத்திரிகையாளர்கள் நடத்தும் பத்திரிகைகளை இல்லாமல் செய்து விட்டு, ஆளில்லா களத்தில் கம்பு சுத்த நினைப் பதாகவே இருக்கிறது. இல்லாவிட்டால், போலி களை ஒழிக்க வேண்டும் என்ற செய்தியில், சம்பந்தமில்லாமல் அங்கீகாரம் பெற்ற சில பத் திரிகைகளை மட்டும் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அதில் அங்கீகார அட்டை பெற்ற அனைத்து பத்திரிகை பெயர்களையும் வெளியிட்டு, யாருக்கு எத்தணை அட்டை கள் கொடுக் கப்பட்டு உள்ளது என வெளியிட்டு இருக்கலாம். அவர்கள் குறிப்பிட்ட பத்திரிகைகளில் பல பேர், ஆர்.என்.ஐ., பெற்ற பத்திரிகை கள், முறையாக மத்திய அரசு கேட்கிற படி சர்குலேசன் கணக்கு காட்டும் பத்திரிகைகள் ஆகும். ஏ.பி.சி., சர்குலேசன் சான்று பெற்றவர்களுக்கு தான் அங்கீ காரம் கொடுக்க வேண்டும் என்றால், ஐ.ஆர். எஸ்., மற்றும் ஆர்.என்.ஐ., யே கொடுக்கும் சர்குலேசன் சான்றுகள் எல்லாம் எதற்கு என்று அதன் நிருபர் கொஞ்சம் சிந்திக் கலாமே. இன்னும் ஏ.பி.சி., ஐ.ஆர். எஸ்., போல பத்திரிகை விநியோகம் பற்றி கணக்கிட்டு அறிக்கை அளிக்க எத்தனை நிறுவனங்கள் இருக்கிறது என்றாவது அவருக்கு தெரியுமா? அவருக்கு தான் தெரியவில்லை என்றால் அந்த பத்திரிகையின் ஆசிரியருக்கும் தெரியாமலா போனது? போலிகளை அடையாளம் காட்ட செய்தவதாக நினைத்து கொண்டு, தங்களுடைய களத் தில் யாரும் இருக்க கூடாது என்ற ஏகாதிபத்திய மனோ பாவத்தில் இந்த செய்தியை உருவாக்கி இருக் கிறார்கள். செய்தியை வெளி யிட்ட ஜு.வி.யின் அடித் தளமும், அந்தரங்கமும் எங் களுக்குத் தெரியும். இதை நாங்கள் சும்மாவிடுவதாக இல்லை. மோதிப்பார்க்க முடிவு செய்துள்ளோம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)