சித்தையன் கோட்டையில் சமத்துவப் பொங்கல் விழா

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டையில் அனைத்து சமூக மக்களும் ஒன்றிணைந்து (17-01-2020) வெள்ளிக்கிழமை மாலை 5மணி அளவில் சித்தையன் கோட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் ஊர் ஜமாத் தலைவர் அ.ரசூல் மொய்தீன், அ.ரபீக் மைதீன்,வழக்கறிஞர் செல்லமரைகாயர்,J.அக்பர் அலி,மு.உமர் பாரூக், வித்ய சிக்ஸா பள்ளியின் தாளாளர் கா.ஜெகநாதன், முன்னால் ஒன்றியப் பெருந்தலைவர் பி.கோபி,ரமேஷ் உள்ளிட்ட பல ஊர் முக்கியஸ்தர்களும் இளைஞர்களும் எராலமாக கலந்துகொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்