வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம்-வங்கி சேவைகள் தடைபடும் அபாயம்..

இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், திட்டமிட்டபடி வங்கி ஊழியா்கள் ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய இரண்டு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.


20 சதவீத ஊதிய உயா்வு, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதிய பலன்களுக்கு வரி விலக்கு, வங்கி அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரத்தை அமல்படுத்துதல், அனைத்து வங்கிக் கிளைகளிலும் ஒரே மாதிரியான வேலை நேரத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய இரண்டு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.


வேலை நிறுத்தப் போராட்டத்தில் அகில இந்திய அளவில் 10 லட்சம் ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு