அமைச்சர் பாஸ்கரன் பேச்சுக்கு எஸ்.வி.சேகர் ஹலோ ராஜ்பவனா என மிரட்டல்

சென்னை: பாஜகவிடம் இருந்து பிரிந்து செல்ல நேரத்தை எதிர்பார்க்கிறோம் என்று தமிழக அமைச்சர் பாஸ்கரன் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. இளையான்குடியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பாஸ்கரன், பாஜகவிடம் இருந்து பிரிந்து செல்லும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என பேசியிருந்தார். இது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக பாஜகவின் நடிகர் எஸ்.வி.சேகர் தமது ட்விட்டர் பக்கத்தில், பாஸ்கரன்னு ஒருத்தர் அமைச்சரா இருக்காரா⁉️ ஹல்லோ ராஜ்பவனா? என பதிவிட்டிருந்தார். அமைச்சர் பாஸ்கரன் பதவியை பறிக்க வேண்டும் என்கிற தொனியில் எஸ்.வி.சேகர் பதிவிட்டிருப்பதும் சர்ச்சையாகி உள்ளது. ராஜ்பவன் என்ன உங்களுக்கு சரவணபவனா? என ஒரு ட்விட்டீஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளார். இது என்ன Hello IncomTaxa? மாதிரி இருக்கிறது என மற்றொரு ட்விட்டீஸ்ட் கேட்டிருக்கிறார். இது அப்பட்டமான மிரட்டல் அரசியல் என்றும் எஸ்.வி.சேகரின் ட்விட்டரில் பக்கத்திலேயே கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.