நீதிபதி கிருபாகரன் இருக்கிறாரே....-சவுக்கு சங்கர்

போகாத ஊருக்கு வழி சொல்ல வேண்டுமென்றால் இவரிடம்தான் போக வேண்டும். ஒருவன் என் வீட்டுக்கு தண்ணீர் இணைப்பு வரவில்லை என்று வழக்கை இவரிடம் எடுத்து சென்றால், கிருபாகரன் இப்படித்தான் உத்தரவு பிறப்பிப்பார். 1) தமிழகத்தில் மொத்தம் எத்தனை குடிநீர் குழாய்கள் உள்ளன 2) அவற்றில் சிமெண்ட் குழாய்கள் எத்தனை. ப்ளாஸ்டிக் குழாய்கள் எத்தனை ? 3) எத்தனை குடிநீர் குழாய்களை பராமரிப்பதற்கு ஒரு பொறியாளர் 4) கடைசியாக எந்த ஆண்டு குடிநீர் குழாய்கள் புதுப்பிக்கப்பட்டன ? 5) புதுப்பிக்க ஆன செலவு எவ்வளவு ? இது போல இன்னும் 30 கேள்விகளை கேட்டு, மெட்ரோ வாட்டர் சேர்மேன், எம்டி, தலைமை பொறியாளர், TWAD போர்டு எம்டி, தலைமை பொறியாளர், MAWS துறையின் செயலாளர், என்று ஒரு 10 ஐஏஎஸ் அதிகாரிகளை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடுவார். இந்த வழக்கு முடியும் முன்னர், இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு சென்று விடுவார். அத்தோடு அதை மறந்து விடுவார். அடுத்து ஒரு புதிய வழக்கை கையில் எடுப்பார் இப்படி இவர் உதிர்த்த முத்துக்களில் ஒன்றுதான், “அரசு தாய்ப்பால் கொடுப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது” இதே போல, காவல் துறை உயர் அதிகாரிகள் வீட்டில் காவலர்கள் பணியாற்றுவது குறித்து இரண்டு மாதத்துக்கு பரபரப்பாக உத்தரவு பிறப்பித்தார். இப்போது அந்த வழக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தின் போது, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த ஒரு உத்தரவை விமர்சித்து, ஒரு அரசு ஊழியர் முகநூலில் எழுதி விட்டார் என்பதற்காக அவரை கைது செய்ய உத்தரவிட்டவர் நீதிபதி கிருபாகரன். எச்.ராஜா, உயர்நீதிமன்றத்தை மயிரு என்றபோது, நீதிபதி கிருபாகரனின் வீரம் எங்கே போனது என்று தெரியவில்லை. நீதிபதி சிடி.செல்வம் மட்டுமே தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தார். முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி, பொன் மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு, பொய்யான தகவல்களை கொடுத்து, பணி நீட்டிப்பு பெற்று விட்டார் என்று ஒரு பத்திரிகையாளர் வழக்கு தொடுக்கிறார். அவரது அடையாள அட்டையை காட்டுங்கள் என்று அவர் வழக்கறிஞரிடம் கேட்டதும், அவர் எடுத்து கொடுத்த அடையாள அட்டைகளில் மனுதாரரின் பத்திரிகையாளர் அடையாள அட்டையோடு, பணி இடைநீக்கத்தில் இருக்கும் டிஎஸ்பி காதர் பாஷாவின் அடையாள அட்டையும் வந்து விட்டது சிலை கடத்தலில் சம்பந்தப்பட்ட ஒரு டிஎஸ்பியின் அடையாள அட்டை எப்படி மனுதாரரிடம் வந்தது என்று ஒரு கேள்வி எழுப்பியதோடு, நீதிபதி கிருபாகரன், 25 துணை கேள்விகளை எழுப்பினார் மொத்தம் எத்தனை பத்திரிகையாளர் சங்கங்கள், அதில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் எத்தனை, அவற்றுக்கு தேர்தல் எப்போது நடந்தது, அச்சங்கங்களின் நிர்வாகிகள் யார், பத்திரிகையாளர்கள் விபத்தில் இறந்தால் அரசு நிதி உதவி கிடைக்குமா, பத்திரிக்கையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் குழுவின் உறுப்பினர்கள் யார், அவர்கள் தகுதி என்ன, தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள் என்ன, போலி பத்திரிகையாளர்கள் எத்தனை, அவர்களை களையெடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, இப்படி நீண்டு கொண்டே போகின்றன கேள்விகள் நீதிபதி கிருபாகரன் அவர்களே... பத்திரிகையாளர்களில், போலி பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். அவர்கள் இன்று நேற்றல்ல. காலம் காலமாக இருந்து வருகிறார்கள். பத்திரிக்கையாளர்களில் யார் அசல், யார் போலி என்பதை கண்டறிவது அத்தனை எளிதல்ல இந்து இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியாவில் பணியாற்றுபவர்கள்தான் உண்மையான பத்திரிகையாளர்கள் என்று இல்லை. இன்று சமூக வலைத்தள காலத்தில், வெகுஜன ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களை விட, இவற்றில் செய்தியை ப்ரேக் செய்பவர்கள் ஏராளமாக உள்ளனர். அதனால் அவர்கள் பத்திரிகையாளர்கள் இல்லை என்றாகி விடுமா சர்குலேஷனே இல்லாத ஒரு சிறிய பத்திரிகையில் அற்புதமாக எழுதும் ஒருவனும் பத்திரிக்கையாளர்தான். சிபாரிசால் வேலை வாங்கி, திறமையே இல்லாமல் பெரிய பத்திரிகையில் வேலை செய்பவனும் பத்திரிகையாளன்தான். பெரிய பத்திரிகையில் வேலை செய்பவன் அரசு அடையாள அட்டை வைத்திருப்பான். சின்ன பத்திரிகையில் வேலை செய்பவனுக்கு இந்த அங்கீகாரம் இருக்காது. அதனால் அவன் பத்திரிகையாளன் இல்லை என்று ஆகி விடுமா ஏழுமலை வெங்கடேசன், ஆர்.மணி, டி.என்.கோபாலன் போன்றோர் இன்று முழுநேர பத்திரிகையாளர்களாக எங்கும் பணியாற்றவில்லை. ஆனால் இன்றும் அவர்கள் ஊடகப்பணியை செய்து வருகின்றனர். அவர்கள் பத்திரிகையாளர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா ஊடகத் துறையை சீர்படுத்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதை உயர்நீதிமன்றம்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. நீதிபதி கிருபாகரன், ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து, இந்த அனைத்து விவகாரங்களையும் விசாரிக்க சொல்லலாம். அந்த குழுவின் அறிக்கையை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடலாம் நீதிபதி கிருபாகரன் முன்பு உள்ள வழக்கு, பொன் மாணிக்கவேல், பொய் தகவலை கூறி நீதிமன்றத்தை ஏமாற்றினார் என்பதே. அதைத்தான் சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். ஆனால் அதைத் தவிர வேறு அனைத்து வேலைகளையும் அவர் செய்து வருகிறார் பத்திரிகையாளர்களிடையே நிலவும் அரசியல் குறித்து நீதிபதி கிருபாகரன் அவர்களுக்கு தெரியவில்லை. தமிழக பத்திரிகையாளர்கள் அரசியல், ஒரு மோசமான சகதி நிரம்பிய குட்டை. இதை சுத்தம் செய்ய யாராலும் முடியாது இருக்கும் ஒன்றரை ஆண்டுகளில், நீதிபதி கிருபாகரன் அவர்கள், தன் முன் வரும் வழக்குகளில் விரைவாக தீர்ப்பு எழுதி, அவர் தீர்ப்புகள் காலாகாலத்துக்கும் அவர் பெயரை பேச வைக்கும்படி பணியாற்ற வேண்டும். இப்படி வீர வசனம் பேசி, வெட்டி வேலை பார்ப்பதால் சமூகத்துக்கு எந்தப் பயனும் இல்லை என்பதை மாண்புமிகு நீதியரசர் உணர வேண்டும் இது என் கருத்து மட்டுமல்ல. உயர்நீதிமன்றத்தில் உள்ள பெரும்பாலான வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளின் கருத்து. -சவுக்கு சங்கர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)