பேருந்து நிலைய கழிவறையை ஆக்கிரமித்து பெண்

சென்னை மாதவரத்தில் உள்ள அடுக்குமாடி பேருந்து நிலையத்தின் கழிவறையை பெண் ஒருவர் ஆக்கிரமித்து கட்டாயமாக ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை வசூலிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர் இந்தப் பேருந்து நிலையம் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திறக்கப்பட்டது இந்தப் பேருந்து நிலையத்தின் சிறப்பு அம்சங்களைப் பற்றி பார்ப்போம் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும்போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், மாதவரத்தில் புதிய அடுக்குமாடி புறநகர் பேருந்து நிலையத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட ஆக்கிரமித்து செய்திக்குறிப்பு: சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், சென்னையில் இருந்து வடக்கே உள்ள திருவள்ளூர், திருப்பதி, காளஹஸ்தி, நெல்லூர் போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கென மாதவரத்தில் 8 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, ரூ.95 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். வசதிகள்: புதிய பேருந்து நிலையமானது அடித்தளம், தரைத்தளம், மேல்தளம் ஆகியவற்றை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளது. பேருந்து நிலையக்கட்டடத்தின் அடித்தளத்தில் பயணிகள் வசதிக்காக 1,700 இருசக்கர வாகனங்கள் மற்றும் கட்டடத்தின் முன் பகுதியில் 72 மினி பேருந்துகள் நிறுத்துவதற்கான இடவசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. தரைத்தளத்தில் பயணிகள் காத்திருப்பு இருக்கைகள், இலவச பொது கழிவறைகள், பயணச்சீட்டுகள் வழங்கும் இடங்கள், தாய்மார்களுக்கான பாலூட்டும் தனி அறை, உணவகம், ஏ.டி.எம். மையம் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேல்தளத்தில் அவசர சிகிச்சை அளிக்க மருத்துவ வசதி, பயணிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான ஓய்வு அறைகள் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பேருந்து நிலையத்தில் சிமென்ட் கான்கீரிட் நடைபாதை, மழைநீர் வடிகால் வசதி, குடிநீர் வழங்கல் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி, தீயணைப்பு வசதி, உயர் மின் விளக்கு கம்பங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள் ளன. இதனால், வடசென்னைப் பகுதி பொதுமக்கள் பெரிதும் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது ஆனால் பெண் ஒருவர் அந்த இலவச கழிவறையை ஆக்கிர மித்து கட்டாய கட்டணம் வாங்கி வருகிறார். அங்கு வரும் சில பயணிகள் இலவசம் தானே என பணம் தர மறுப் பவர்களை தறக்குறைவான வார்த்தைகளால் திட்டுவதாக கூறப்படுகிறது இது பயணிகளை முகம் சுழிக்க வைக்கிறது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)