அரசு நிலம் தனியாருக்கு தாரைவார்ப்பு.. வருவாய்த்துறையினரின் அதது மீறல்கள்..

ஒருங்கிணைந்திருந்த வேலார் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் காட்பாடி தொகுதியில் தான் அதிக அளவில் ஓஏபி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக உள்ளாட்சி தேர்தலை கவனத்தில் கொண்டே ஓ.ஏ.பி. பெற ஆண்டு வருவாய் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளதால், ஆளும் கட்சியில் அதிகாரத்தில் இருப்பவர்கள் முதல் வருங்கால உள்ளாட்சி தேர்தல் மூலம் அதிகாரத்திற்கு வர துடிக்கும் அனைத்துக் கட்சி பொறுப்பாளர்கள் வரை ஓ.ஏ.பி. கேட்டு மனு கொடுக்கும் பயனாளிகளின் பட்டியலை வைத்துக் கொண்டு வி.ஏ.ஓ., மற்றும் ஆர்.ஐ. அலுவலகம் முதல் காட்பாடி தாலுக்கா டி.ஆர்.எஸ். அலுவலகம் வரை அலைந்து கொண்டு இருக்கின்றனர். இப்படி அரசியலில் ஜொலிக்கவும், அதிகாரம் செலுத்தவும் ,அரசியல்வாதிகள் முழுமூச்சாய் சுழன்று வேலைப் பார்த்து வரும் வேலையில், ஒரு ஓ.ஏ.பி. உதவி தொகை பெற 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்த காலம் போய், தற்போது மூன்று பங்காக உயர்த்தி 9 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கட்சி பாகுபாடின்றி பணம் கொடுக்கும் அனைவருக்கும் ஒ.ஏ.பி. நிச்சயம் என்ற நிலையை உருவாக்கி உள்ள னர். கரசமங்க லம் வி.ஏ.ஓ. பவிதாவும், அரும்பாக்கம் முன்னாள் வி.ஏ.ஓ.வும், தற்போதைய காட்பாடி டி.ஆர்.எஸ். அலுவலக ஊழியர் கலாவதியும், வி.ஏ.ஓ. பவிதா, கரசமங்கலம்அ ளவில் லஞ்சப் பணம் வசூலில் கொடிக் கட்டி பறந்தாலும், டி.ஆர். எஸ். அலுவலக ஊழியர் கலாவதி காட்பாடி கல்வபடுத்தி" தாலுக்கா அளவில் தனது சமஸ்தானத்தை விரிவுபடுத்தி லட்சக்கணக்கான ரூபாய் கல்லா கட்டி வருவதாக விவரமறிந்தவர்கள் சொல்கின்றனர். தற்போது இதில் சுவாரசியமான சங்கதி என்னவென்றால், ஏற்கனவே 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து ஓ.ஏ.பி.க்கு விண்ணபித்தவர்களில் சிலரின் பெயர் பயனாளிகள் பட்டியலில் வர அப்பெயர் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்களிடம் உங்களுக்கு ஓ.ஏ.பி. ஆர்டர் வாங்கி தருகிறேன். அதற்கு 9 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று அமமையார்கள் பவதா ஒரு பக்கமும், கலாவதி மறுபக்கமும், கலெக்சன் செய்து கொண்டிருக்கின்றன வி.ஏ.ஓ. பவிதாவுக்கு லஞ்சப் பணம் வசூலத்து கொடுக்கும் வேலையை, கராம உதவியாளர் கீதா கணகச்சிதமாக செய்து வருகிறார். கடந்த வாரம் காட்பாடி தாலுக்கா அலுவலகம் வந்த பவிதா மேடம் என் நிர்வாக எல்லையில் உள்ளவர்களிடம் நீ எப்படி ஓ.ஏ.பி.க்கு கை நீட்டலாம் நான் எதற்கு இருக்கிறேன்ஸ என கலாவதி மேடத்திடம் இஷ்டத்துக்கும் எகிறினாராம். பதிலுக்கு கலாவதியும் எகிற எங்கே குடிமிப்பிடி சண்டை வந்து டி.ஆர். எஸ் அலுவலகத்தின் வசூல் வேட்டை வெளிச்சத்துக்கு வந்துடுமோ என மிரண்ட சக அலுவலக ஊழியர்கள் ஓடி வந்து இருவரையும் சமாதானம் செய்ய வேண்டிய நலை வந்ததாம். இவர்களின் ரகளை குறித்து விவரமறிந்த பத்திரிகையாளர்கள் சிலர் டி.ஆர்.எஸ். பழனியிடம் பேசிய போது ஓ.ஏ.பி. பெற்று தருவதாகச் சொல்லி காட்பாடி தாலுக்காவில் அதிகளவில் வசூல் வேட்டை செய்துள்ளதாக சொல்லப்படும் கலாவதி மேடத்திற்கு ஆதரவாக கச்சை கட்டி பேசினாராம். டி.ஆர்.எஸ். பழனி, அதே சமயத்தில் பவிதா மேடத்தை பலமாக சிக்க வைக்க சில ஏற்பாடுகளையும், அவர் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இதையறிந்தோ, என்னவோ வி.ஏ.ஓ. பவிதா தனது நிர்வாக எல்லையில் ஓ.ஏ.பி.க்காக வசூலித்த பணத்தை சிலருக்கு திருப்பி கொடுத்து வருவதாகவும் ஒரு வாரத்திற்கு முன்பே சிலரின் ஓ.ஏ.பி. ஆர்டர்களை வாங்கி வைத்துக் கொண்டு பணம் வசூலுக்காக ஆர்டர்களை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தவர். தற்போது உரியவர்களை தேடிச் சென்று ஓ.ஏ.பி. ஆர்டர்களை வழங்கி வருகிறாராம். இது ஒருபுறம் இருக்க வி.ஏ.ஓ. பவிதா நேரத்துக்கு பணிக்கு வருவதே கிடையாதாம். பகலில் 11 மணிக்கு மேல் அலுவலகம் வந்து விட்டு ஒரு மணிக்கெல்லாம் சென்று விடுகிறார் என குற்றம் சாட்டுகிறார்கள் கிராம மக்கள். தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர்கள் விதிகளின்படி கிராம நிர்வாக அலுவலர்கள் கட்டாயம் தாங்கள் பணி புரியும் கிராமங்களிலேயே வசிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது . ஆனால் பவிதா மேடம், அவர் பணி புரியும் கரசமங்கலம் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சங்கரன்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். அதனாலயே தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு பணிக்கு வருவதாக கூறுகிறார்கள். கரசமங்கலத்தில் பூர்வீக சொத்துக்கள் உள்ள ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பாக சென்னைக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து அங்கேயே இறந்துள்ளார். அதற்கான இறப்புச் சான்று சென்னையிலேயே வாங்கப்பட்டுள்ளது.ஆனால் கரசமங்கலம் கிராமத்தில் இறந்தவரின் பெயரில் உள்ள சொத்தை அபகரிக்க திட்டம் தீட்டிய உள்ளூர் உறவுகார கும்பல் சொத்துக்கு சொந்தக்காரர் கரசமங்கலத்திலேயே இறந்ததாகவும், இங்குள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் கூறி சுடுகாட்டில் ஒரு குழி மேல் சொத்துக்கு சொந்தக்காரரின் பெயர் தாங்கிய கல்வெட்டை வைத்து போட்டோ எடுத்து வி.ஏ.ஓ. பவிதாவிடம் காண்பித்து அதற்காக கப்பமாக ஒரு தொகையைக் கொடுத்து இறப்புச் சான்று கேட்டுள்ளதாகவும் அவரும் இறப்புச் சான்று பெற உதவியுள்ளதாகவும் விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகிறது. அதுமட்டுமின்றி அரசுக்கு சொந்தமான சில ஏக்கர் நிலங்களை 3 நபர்கள் அபகரித்து பல ஆண்டு காலமாக அனுபவித்து வருவதாகவும் அதை கண்டும் காணாமல் இருக்க மேற்படி வி.ஏ.ஓ. மேடத்திற்கு, அவர்கள் கப்பம் கட்டி வருகிறார்களாம். அவர்கள் தரும் கப்பத்திற்காகவே அரசு சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் தீட்டப்படும் மரம் வளர்ப்பு உள்ளிட்ட ஏனைய திட்டங்கள் இடம் இல்லாத காரணத்தால் செயல்படுத்தப்படாமல் போயுள்ளதாகவும் சொல்கிறார்கள். ஏற்கனவே வி.ஏ.ஓ. மேடம் குடும்பத்தில் லஞ்சம் வாங்கி குவித்த ஒருவர் விசிலென்சில் சிக்கி தினறிய அனுபவம் இருந்தும் பவிதா மேடம் திருந்துவதாக தெரியவில்லை என்கிறார்கள் சக ஊழியர்கள். மேற்சொன்னவர்கள் மீது சரியான முறையில் விசாரணை நடத்தினால் ஏழை, எளியோர்களை சுரண்டி சம்பாதிக்கும் அரசு நிலங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் இவர்களைப் போன்றோரின் தகிடுதத்தங்கள் வெளிச்சத்துக்கு வர செய்வாரா? மாவட்ட வருவாய் அலுவலர் பொறுத்திருந்து பார்ப்போம்!...


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)