சாலை பாதுகாப்பு வாரம் நாள் -7.

31 வது சாலை பாதுகாப்பு வாரத்தின் நிறைவு நாளான நேற்று அகில இந்திய வானொலி திருநெல்வேலி பண்பலையின் “கருத்துக் களம்” நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நேயர்களின் கேள்விகளுக்கு நேரலையில் பதிலளித்தேன்.


திருநெல்வேலி , தூத்துகுடி , கன்னியாகுமரி , விருதுநகர் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த 28 நேயர்களின் சாலை பாதுகாப்பு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தேன். நிகழ்ச்சியில் மேலப்பாளையத்தை சேர்ந்த ஜாபர் என்ற நேயர் மேலப்பாளையம் நேருஜி சாலையில் ரஹ்மானியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் “பள்ளி வளாகம் “என்ற எச்சரிக்கை பலகை பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.


இன்று அந்த தகவல் பலகைகள் பொருத்தி அவருக்கு தகவல் தெரிவித்ததால் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த இயக்குநர் சுந்தர ஆவுடையப்பன் அவர்களுக்கும் நிகழ்ச்சிக்கு இடையில் தெறி, சேதுபதி , வேட்டையாடு விளையாடு என காவல்துறை தொடர்பான திரைப்படங்களிலிருந்து பாடல்களை வழங்கிய தொகுப்பாளருக்கும் நன்றி.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்