வயசு 68.அதிமுக பிரமுகர்ஆனால் மொட்டை மாடியில். 13 வயது சிறுமியிடம்.. தூக்கியது போலீஸ்

68 வயசு தாத்தா 13 வயசு பெண் குழந்தையை நாசம் செய்ய முயன்றிருக்கிறார்.. இந்த பெரியவர் ஒரு அதிமுக பிரமுகர் என்பது அதிர்ச்சி தகவல்.. இப்போது போலீஸ் தூக்கி இவரை உள்ளே வைத்துள்ளது! சென்னை வண்ணாரப்பேட்டை மாடர்ன் லைன் பகுதியை சேர்ந்தவர் பாளையம் என்கின்ற ரவி... 68 வயதாகிறது.. இவர் அதிமுக பிரமுகர் ஆவார். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதிமுக எம்ஜிஆர் மன்ற 52வது வட்ட தலைவராகவும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை தன் வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று.. செல்போனில் வைத்திருந்த ஆபாச வீடியோக்களை காண்பித்து பாலியல் தொந்தரவு தந்துள்ளார்.. ரவி எசகுபிசகாக நடந்து கொண்டிருப்பதை பக்கத்து வீட்டில் வசிப்பவர் பார்த்து உடனடியாக சிறுமியின் பெற்றோருக்கு தகவலை சொல்லி, 1098 ஹெல்ப் லைன்னை தொடர்புகொண்டும் புகார் அளித்தார். உடனே ஹெல்ப்லைன் எண்ணில் இருந்து தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் போலீசுக்கு அந்த புகார் அனுப்பப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகளிர் போலீசார் ரவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் ரவி சிறுமியை 6 மாசமாகவே இப்படி துன்புறுத்தி வந்த விஷயம் வெளிவந்தது. அப்போது அவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. மேலும் ரவியை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் அதிமுக பிரமுகர் என்பதால் போலீசார் விடுவித்து விடுவார்கள் என்று எண்ணி அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் கல்லறை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை போலீசார் உறவினர் மற்றும் பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி, ரவி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது! ஆபாச படத்தை செல்போனில் வைத்திருந்தாலே 10 வருஷம் என்று கூடுதல் டிஜிபி ரவி ஏற்கனவே எச்சரித்துள்ளார்.. ஆனால் இந்த அதிமுக ரவி வீடியோவை சிறுமிக்கே போட்டு காட்டி சீண்டலில் ஈடுபட்டதால் எப்படியும் கடுமையான நடவடிக்கை இருக்கும்என்றே தெரிகிறது.