திருப்பூரில் வர்ற 5-ம் தேதி மனைவிக்கு வளைகாப்பு.. காரில் சென்ற செய்தியாளர் விபத்தில் சிக்கி பலி..

கோவை: வர்ற 5-ம்தேதி மனைவிக்கு வளைகாப்பு.. காரில் சென்று கொண்டிருந்த ரிப்போர்ட்டர் ராஜசேகரும், அவரது தாயாரும் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையின் திருப்பூர் மாவட்ட ரிப்போர்ட்டர் ராஜசேகர்.. இவருக்கு திருமணமாகி இன்ப நித்திலன் என்ற 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறான்.. தற்போது இவரது மனைவி மீண்டும் கர்ப்பமாக உள்ளார். அடுத்த மாதம் மனைவிக்கு வளைகாப்பு


நிகழ்ச்சியை சிறப்பாக செய்ய திட்டமிருந்த ராஜசேகர், அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டார். இந்நிலையில் நேற்று சொந்தக்காரர்கள் கல்யாணத்துக்காக தன்னுடைய அம்மா யமுனா ராணி 52, சகோதரி பானுப்பிரியா 31, மற்றும் குழந்தை இன்ப நித்திலனுடன் காரில் சென்றிருந்தார்.


திருமணத்தை முடித்துவிட்டு கோவை மேட்டுப்பாளையம் நோக்கி திரும்பி கொண்டிருந்தார். அவிநாசி நரியம்பள்ளிப்புதூர் அருகே சென்ற போது, ஊட்டியில் இருந்து மதுரை நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது.. அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டது..


பஸ்சுடன் பலமாக வந்து மோதியதில், ராஜசேகரும், யமுனா ராணியும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். சகோதரி பானுப்பிரியா, குழந்தை இன்ப நித்திலன் ஆகியோர் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்...


அங்கு அவர்களுக்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.. அடுத்த வாரம் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி செய்ய ஆசையாக இருந்த நிலையில், செய்தியாளர் தனது தாயாருடன் மரணமடைந்தது பத்திரிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)