5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு!

டெல்லியில் 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லி காந்திநகரில் 2013ஆம் ஆண்டு 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மனோஜ் ஷா, பிரதீப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். News7 Tamil இந்த வழக்கை விசாரித்த டெல்லி கர்காடூமா மாவட்ட நீதிமன்றம், சிறுமிகளை தேவதைகளாக மதிக்கும் சமூகத்தில், 5 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளதாக கவலை தெரிவித்தது. குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிமன்றம், தண்டனை மீதான வாதங்கள் ஜனவரி 30 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்தது.