45 பேருக்கு தமிழக அரசின் சிறப்பு விருதுகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் கலை அரங்கில் நடந்தது. விழாவில் திருவள்ளுவர் சித்திரை தமிழ் புத்தாண்டு விருது, சிறப்பு மொழி பெயர்ப் பாளர்கள் விருது, உலக தமிழ் சங்க விருது, கலைப்பண்பாட்டு துறை கலைச் செம்மல் விருது பெற்ற 45 பேருக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார். அவர்களுக்கு விருதுகள் மற்றும் ரொக்க பணத்துக்கான காசோலைகள் வழங்கப் பட்டன. விருது பெற்றவர் களுக்கு பொன் னாடைகளும் அணிவித்து பாராட்டினார். நாட்டுடமை ஆக்கப் பட்ட நூல்களுக்காக 7 தமிழ் அறிஞர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் முதல் அமைச்சர் வழங்கினார். விருது பெற்றவர்களின் விவரம் வருமாறு: 2020 ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது நித்யானந்தபாரதி, 2019ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருதுசெஞ்சி ராமச்சந்திரன், பேரறிஞர் அண்ணா விருது கோ.சமரசம், அண்ணல் அம்பேத்கார் விருதுக.அர்ஜூனன், பெருந்தலைவர் காமராஜர் விருது மதிவாணன், மகாகவி பாரதியார் விருது ப.சிவராஜி. பாவேந்தன் பாரதிதாசன் விருது தேனிசை செல்லப்பா, தமிழ்தென்றல் திரு.வி.க. விருது சுந்தரராசன், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் விருது மருத்துவர் மணிமேகலை கண்ணன். சித்திரை திருநாள் புத்தாண்டு விருது பெறுவோர் விவரம் வருமாறு தமிழ்த்தாய் விருது சிகாகோ தமிழ் சங்கம் நம்பி, மணி ஆகியோருக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப் பட்டது. கபிலர் விருது புலவர் வெற்றியழகன், உ.வே.ச. விருது மகாதேவன், கம்பர் விருது சரஸ்வதி ராமநாதன், சொல்லின் செல்வர் விருது கவிதாசன், ஜி.யு.போப் விருது, மரியஜோசப் சேவியர், உமரு புலவர் விருது லியாகத் அலிகான், இளங்கோ அடிகள் விருதுகவிக்கோ ஞானசெல்வன், அம்மா இலக்கிய விருது உமையாள் முத்து, சிங்காரவேலர் விருது அசோகா சுப்பிர மணியன், மறைமலை அடிகள் விருது புலவர் முத்துக்குமாரசா. அயோத்தி தாசர் பண்டிதர் விருது புலவர் பிரபாகரன், முதலமைச்சர் கணினி தமிழ் விருது நாகராசன் இவர்களுக்கு தலா ரூ. 1 லட்சத்துக்கான காசோலையும் ஒரு சவரன் தங்க பதக்கமும், விருதும் வழங்கப்பட்டது. சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருதை முகமதுயூசுப், மஸ்தான் அலி, முருகேசன், கடிகாசலம், மரபின் மைந்தன் முத்தையா, வத்சலா, முருகு துரை, மாலன், கிருசாங்கினி, மதிவாணன் ஆகியோர் பெற்றனர். இவர்களுக்கு தலா ரூ. 1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. உலகத்தமிழ் சங்க இலக்கிய விருது ராசேந் திரன் (மலேசியா), இலக்கண விருதுமுத்து கஸ்தூரி பாய் (பிரான்ஸ்), மொழியியல் விருது சுபதினி ரமேஷ் (இலங்கை) இவர்களுக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. தமிழக அரசு விருது பெற்றவர்களுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மரபு வழி கலைவல்லுனர் களுக்கான விருதை கணபதி ஸ்தபதி, ராமஜெயம், தமிழரசி, கீர்த்தி வர்மன், கோபாலன் ஸ்தபதி ஆகியோர் பெற்றனர். நவீன பாணி கலை வல்லுனர்களுக்கான விருதை எஸ்.பி.நந்தன், கோபிநாத், அனந்த நாராயணன் நாகராஜன், டக்லஸ், ஜெயக் குமார் ஆகியோர் பெற்றனர். இவர்களுக்கு கலைச்செம்மல் விருது, ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப் பட்டது. நூல் நாட்டுடமை ஆக்கப்பட்டதற்கான பரிசுத்தொகை தலா ரூ.5 லட்சத்தை தமிழ் அறிஞர்கள் உளுந்தூர்பேட்டை சண்முகம், கவிஞர் நா.காமராசன், இரா.இளவரசு, அடிகளாசிரியர், புலவர் இறைக்குருவனார், பண்டித ம.கோபால கிருஷ்ணன், பாபநாசம் குறள் பித்தன் ஆகி யோரின் குடும்பத்தினர் பெற்றனர். நிகழ்ச்சியில் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.