அ.தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேடு.. ஐசியூவில் உள்ள மின் வாரியம்.. விரைவில் திவலாகும்

தமிழ்நாட்டின் தினசரி மின் தேவை 13 ஆயிரத்து, 215 மெகாவாட். ஆனால் தற்போதைய உற்பத்தி 2,974 மெகாவாட் தான் உள்ளது. தினந்தோறும் 4,881 மெகாவாட் மின்சாரம் மத்திய திட்டங்கள் மூலமும், 5,360 மெகாவாட் தனியாரிடமும் வாங்கப்பட்டு வருகிறது.தனியார் நிறுவனங்களிடம் இருந்து கூட்தல் விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார், 8 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு மின்வாரியத்துக்கு ஏற்படுகிறது. இதனால் தமிழக மின் வாரியத்தின் மொத்தக் கடன் 1 லட்சத்துக்கு 50 ஆயிரம் கோடி ரூபாயாக நெருங்கிவிட்டது அதேச்சமயத்தில் தமிழக அரசு துறைகளும் மின் வாரியத்துக்கு ரூ.1500 கோடி கடன் பாக்கி வைத்துள்ளது. இது போன்ற பிரச்னைகளை 3 மாதத்திற்குள் சீரமைக்கவில்லை என்றால் மின் திட்டங்களுக்கு கடனுதவி செய்யப்போவதில்லை என மத்திய அரசு கைவிரித்துள்ளது. இதனிடையே, மின் பற்றாக்குறை, காலி பணியிடங்கள், ஊதிய உயர்வு தாமதம் உள்ளிட்ட பிரச்னைகளும் மின் வாரியத்தை திக்குமுக்காடச் செய்து வருகிறது. அ.தி.மு.க நிர்வாக சீர்கேட்டால் மரணப்படுக்கையில் உள்ள மின் வாரியம் விரைவில் திவாலாகும் நிலை உண்டாகும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு