மத்திய அரசு ஏப்ரலுக்குள் ரூ.3.55 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலிக்க இலக்கு: வருவாய் துறை கூட்டத்தில் முடிவு

பிப்ரவரி 1-ம் தேதி வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிக்கப் பட உள்ள நிலையில், நடப்பு நிதி ஆண்டுக்கான வரி வசூல் இலக்கை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. நடப்பு நிதி ஆண்டு முடிய ஜனவரி யோடு சேர்த்து இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. இந்நிலை யில், இந்த மூன்று மாதங்களில் கூடுதலாக ரூ.10,000 கோடி ஜிஎஸ்டி வசூலிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. முன்னதாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் தலா ரூ.1.10 லட்சம் கோடியும், மார்ச் மாதத்தில் ரூ.1.25 லட்சம் கோடியும் வரி வசூல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. தற்போது கூடுதாக ரூ.10,000 கோடி வசூ லிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத் தில் தலா ரூ.1.15 லட்சம் கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள் ளது. நவீன தொழில்நுட்பங்களின் வழியே ஜிஎஸ்டி மோசடிகளை தடுத்து அதன் மூலம் வரி வசூலை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சகத்தின்கீழ் வரும் வருவாய்த் துறை நடத்திய கூட் டத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. வருவாய்த் துறை செயலாளர் அஜய் பூஷண் பாண்டே ஒருங்கிணைத்த இந்தக் கூட்டத்தில், மத்திய மறைமுக மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி), மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வரி மோசடியை தடுக்கும் வகை யிலும், வரி வசூலை அதிகரிக் கும் வகையிலும் கூடுதல் நடவடிக் கைகள் மேற்கொள்ள இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை ஒட்டிய பண்டிகை தின காலகட்டத்திலேயே ரூ.1 லட் சம் கோடி அளவில் வரி வரு வாய் கிடைத்த நிலையில், மத்திய அரசின் தற்போதைய இலக்கு அதிகபட்சமானது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நடப்பு நிதி ஆண்டுக்கான வரி வருவாய் குறைந்ததால் மத்திய அரசு கடும் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை 3.3 சதவீதம் அளவில் கட்டுக்குள் வைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. தற் போது அது 3.8 சதவீதமாக அதி கரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு செலவினங்களில் ரூ.2 லட்சம் கோடியை குறைக்க இருப்பதாக தகவல் வெளியானது குறிப் பிடத்தக்கது. மத்திய அரசு நிதிப் பற்றாக் குறையை எதிர்கொள்ளும் வகை யில் நடப்பு நிதி ஆண்டு பட்ஜெட் டில் ரூ.1.05 லட்சம் கோடி அளவில் பொதுத் துறை நிறுவனங்களில் பங்கு விலக்கல் மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால் ஏப்ரல் முதல் நவம்பர் வரையில் ரூ.17,364 கோடி அளவிலேயே பங்குவிலக்கல் மேற் கொள்ளப்பட்டுள்ளது. இது ஒட்டு மொத்த அளவில் 17 சதவீதம் மட்டும்தான். தவிர, நிறுவனங் களுக்கான நிறுவன வரியை 10 சதவீதம் குறைத்ததால் வரி வருவாயில் ரூ.1.45 லட்சம் கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வரி வசூலில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.