கைதுச் செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் அன்பழகன் உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டும் என அனைத்து பத்திரிகையாளர்கள், யூனியன், சங்கம், கடும் கண்டனம்…

சென்னை பத்திரிகையாளர் மன்றம், இந்திய உழைக்கும் பத்திரிகையாளர்கள் சம்மேளனம் (IFWJ), தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ( TUJ ), தமிழ்நாடு பிரஸ் &மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன்,(3579/CNI), தமிழ்நாடு அணைத்து பத்திரிகையாளர்கள் யூனியன், தமிழ் ஊடக மற்றும் பத்திரிகையாளர் நல சங்கம், (AWJU) தமிழ்நாடு அனைத்து உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன், மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் அறப்போர் இயக்கம், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடும் கண்டனம், காகிதம் ராஜன், ஒரு கருத்துக்கு மாறுபட்ட கருத்துடைய புத்தகங்களை விற்கக்கூடாது என்றால்..புத்தக கண்காட்சியில் எந்த புத்தகமும் விற்க முடியாதுஒரே சிந்தனை..ஒரே கொள்கை ஒரே கருத்து அனைவருக்கும் இருந்தால் புத்தகங்கள் தேவையில்லைமனித வாழ்க்கையில் நிலவும் கலை,அரசியல், பண்பாடு,வாழ்வியல்,பழக்க வழக்கம்,ஆன்மீகம்,இவை அத்தனையிலும் மாற்று கருத்து உண்டுஅந்த கருத்து தான் புத்தகமாக வடிவெடுக்கிறதுஅசைவ உணவே சிறந்தது என ஒரு புத்தகம் இருந்தால் அசைவ உணவில் தான் புரதசத்து உள்ளது என மற்றொரு புத்தகம் இருக்கும்பெரியாரின் பகுத்தறிவை பற்றிய புத்தகங்கள் விற்கும் கடைக்கு பக்கத்தில் தான் ஆன்மீக புத்தகங்கள் விற்கப்படுகின்றனஅமெரிக்க முதலாளித்துவத்தை புகழ்ந்து பா.ராகவன் எழுதிய டாலர் தேசம் புத்தகம் விற்கும் இதே கண்காட்சியில் தான் லெனின்..ஸ்டாலின்,மாவோ,ரஷ்ய,சீன புரட்சிப்பற்றிய புத்தகங்களும் விற்கின்றன தமிழக அரசை குற்றம்சாட்டி மக்கள் செய்தி மைய புத்தகம் விற்கும் ஸ்டால் உள்ள இக்கண்காட்சியில் தான்..தமிழக அரசை வானுயர புகழ்ந்து எழுதும் "நமது அம்மா" ஸ்டாலும் உள்ளதுபுத்தக கண்காட்சியில் ஸ்டால் நடத்த முறையாக பணம் செலுத்தப்பட்டுள்ளது,தற்போது அரசுக்கு எதிரான புத்தகங்கள் விற்கிறார்கள் எனக்கூறி ஸ்டாலை காலி செய்ய கூறியிருக்கிறார்கள்,அன்பழகன் இது குறித்து கண்காட்சி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார் அதன் அடிப்படையிக் தகராறு செய்தார் என வழக்கு புனையப்பட்டுள்ளதாக அறிகிறேன்ஸ்டால் நடத்த அனுமதி அளித்த கண்காட்சி நிர்வாகம் தொடர்ந்து அதை நடத்தவும் அனுமதிக்க வேண்டும் அதுவே முறையானதாகும்புத்தகத்தின் உட்கருத்தில்,தலைப்பில் கருத்து மாறுபாடு இருந்தால் அரசு நீதிமன்றத்தைத்தான் நாடவேண்டும் அதுவே நடைமுறை வழக்கம் மேலும்,மக்கள் செய்தி மையம் விற்கும் புத்தகங்கள் இக்கண்காட்சிக்காக எழுதப்பட்ட புத்தகங்கள் அல்ல..அவைகள் இன்றோ..நேற்றோ வெளிவந்த புத்தகங்களும் அல்ல,இப்புத்தகங்களை அவர்கள் வெளியிட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது அதை அவர் தொடர்ந்து விற்பனை செய்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதுஒத்துக்கொண்ட விசயத்தை நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும்..என்பதற்கு உதாரணத்திற்காக ஒன்றை இங்கே கூறுகிறேன் சிபிஎம் கட்சி புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி வருகிறதுஅக்கட்சியின் அதிகார பூர்வ பத்திரிகை தீக்கதிர் நாளிதழ்..சில நாட்களுக்கு முன் அதில் புதிய குடியுரிமை சட்டத்தை விளக்கி,நியாயப்படுத்தி மத்திய அரசு விளம்பரம் பிரசுரமாகியிருந்தது தீக்கதிர் நாங்கள் புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிரானவர்கள் என்று அந்த விளம்பரத்தை வெளியிடாமல் இருக்க முடியாது காரணம்,மத்திய அரசு விளம்பரங்களை பிரசுரிக்கிறோம்.. எங்களுக்கு விளம்பரம் தாருங்கள் என கேட்டு தீக்கதிர் கடிதம் கொடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது,எனவே,தங்கள் கொள்கைக்கு மாறாக விளம்பரம் இருந்தாலும் அதனை பிரசுரிக்க வேண்டிய கட்டாயம் தீக்கதிருக்கு ஏற்பட்டதுஅதேபோல் தான் புத்தக கண்காட்சியில் ஸ்டால் அமைக்க பணம் பெற்ற கண்காட்சி நிர்வாகம் புத்தகங்களின் உள்ளடக்கங்களை கூறி ஸ்டால் நடத்த அனுமதி மறுத்திருக்க கூடாது,இது குறித்து கேள்வி கேட்ட வி.அன்பழகன் மீது தங்களை மிரட்டியதாக புகார் அளித்திருக்கவும் கூடாதுஅன்பழகன் பத்திரிகையாளராக என்பதற்காக மட்டும் நான் இக்கண்டனத்தை வெளியிடவில்லை அவர் பத்திப்பாளராகவோ.பொதுமக்களில் ஒருவராக இருந்தாலும் கூட இவ்விசயத்தில் நியாயம் அவர் பக்கமே உள்ளது என்பதாக..காகிதம் இயக்கம் கருதுகிறது.எனவே,புத்தககண்காட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளையும்,காவல்துறையின் நடவடிக்களையும் எம் "காகிதம் இயக்கம்" வன்மையாக கண்டிக்கிறதுஇவ்விசயத்தில்..இரு தரப்பினரும் புகார் கைது என செல்லாமல் நீதிமன்றத்தை நாடுவதே சிறந்த வழியென கருதுகிறோம் கைதுச் செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் அன்பழகன் உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டும் என பபாசியின் செயலை கைது சம்பமும் அப்பட்டமான அத்துமீறல் கடும் கண்டனம் அணைத்து பத்திரிகை சொந்தங்களம் வலியுறுத்துகிறது. பத்திரிகையாளர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து போராட தூண்டுகிற செயலாகவே கருதப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்