2020 பட்ஜெட்டை தீர்மானிக்கும் அம்பானி ,அதானி, டாடா ..

' இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி ஒரு முக்கிய சந்திப்பை : நிகழ்த்தினார். இந்தச் சந்திப்பில் இந்தியப் பொருளாதாரச் சூழல் குறித்த விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் என்ன மாதிரியான மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. டாடா சன்ஸ் ரத்தன் டாட்டா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானி, மஹிந்திரா -மஹிந்திரா, ஆனந்த் மஹேந்திரா, அதானி இண்டஸ்ட்ரீஸ் கவுதம் அதானி, பார்தி ஏர்டெல் சுனில் மிட்டல், வேதாந்தா அனில் அகர்வால், டாடா சன்ஸ் என்.சந்திரசேகரன், எல்-டிஏ.எம்.நாயக் ஆகிய முன்னணி தொழிலதிபர்களும் அதிகாரிகளும் இந்த ஆலோசனையில் பங்கெடுத்துள்ளனர். நாட்டின் ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம், கடந்த ஆறு ஆண்டுகளைவிடக் குறைவான அளவாக 4.5 சதவிகிதமாக சரிந்துள்ளது. இந்த நிலையில் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும், உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுத்தரப்பில் எடுக்கப்பட்ட, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் தொழிலதிபர்களுடன் நடைபெற்றுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தின் பிரதிபலிப்பை வரவுள்ள பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். ஏற்கனவே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அனைத்துத்துறை சார்ந்த முதலீட்டாளர்கள் மத்தியில் பட்ஜெட்டுக்கு முந்தைய கலந்தாலோசனைக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்தக் கூட்டங்களுக்குப்பின் பட்ஜெட் உரை இறதி செய்யப்படுமென்று தெரிகிறது. நடுத்தர வர்க்கத்தைத் திருப்தி செய்யும் வகையில் வருமான வரியில் சில சலுகைகளை அறிவிப்பது பற்றி மத்திய நிதித்துறை அமைச்சகம் சிந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றது தொடங்கி, நடுத்தர மக்களிடையே இந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏற்கனவே கடந்த செப்டம்பரில் பெருவணிக நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகளை மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. மக்களின் நுகர்வுப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்தச் சலுகைகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரி குறைப்பு தொடர்பான பல்வேறு வாய்ப்புகளையும் மத்திய நிதித்துறை அமைச்சக அலுவலர்கள் ஆராய்ந்து வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பட்ஜெட் தொடர்பாக பொருளாதார வல்லுநர்களிடம் கலந்தாலோசனை செய்யாமல் பெரும் பணக்காரர்களை கூட்டிவைத்து விவாதம் செய்வது அவர்களுக்கான நலத்திட்டத்திற்காகவே இருக்கும். அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கானதாக இந்த பட்ஜெட் இருக்காது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இந்தப் பணக்காரர்கள் மூவரும்தான் பட்ஜெட்டை தீர்மானிக்கும் சக்திகளா? இவர்கள் கையில்தான் இந்தியா உள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது, பட்ஜெட் தாக்கல் செய்யட்டும் பொருத்திருந்து பார்ப்போம். . 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)