ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், 2019ஆம் ஆண்டின் தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தந்தை பெரியார் விருது யாருக்கு என்பது அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு முன், சொந்தக் கட்சியைச் சேர்ந்தவருக்கு வழங்கியதைப் போல் இந்தாண்டு வழங்க ஆள் இல்லையா? அல்லது டெல்லி எஜமானர்களின் மனம் குளிர்வதற்காக தவிர்க்கப்பட்டுள்ளதா? என திமுக ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் 2019ம் ஆண்டுக்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிக்கப்பட்டன. கபிலர் விருது - புலவர் வெற்றி அழகன், உ.வே.சா. விருது - வெ.மகாதேவன், கம்பர் விருது - முனைவர் சரஸ்வதி ராமநாதன், அம்மா இலக்கிய விருது - உமையாள் முத்து உள்ளிட்ட பல விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2019ஆம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது முனைவர் க.அருச்சுனனுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த விருதுகளுடன் ரூ.1 லட்சம், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.ஜனவரி 9,10ஆம் தேதிகளில் பெரியார், அம்பேத்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2019ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் விருது அறிவிக்கப்படாதது குறித்து ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த விருது அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்