இன்னும் எத்தனை குடும்பங்களை விழுங்கப் போகிறதோ இந்தப் பேய்....

சமீபத்தில் விழுப்புரத்தில் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் விஷத்தைக் கொடுத்து மாய்த்துவிட்டு தானும் மாண்டுபோன நகைத்தொழிலாளியின் மரண வாக்குமூல வீடியோவைப் பார்த்தவர்கள் மனம் பதைத் திருக்கும். காரணம் 3 நம்பர் லாட்டரி. ஆனால், தமிழகத்தில் 2003லேயே லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப் பட்டது. காரணம் மதுவினும் கேடாக மன மயக்கத்தைக் கொடுத்து மதியை கெடுத்து, அன்றாட வாழ்வை அழித்துக்கொண்டிருக் கிறதே என்று தமிழகத்தில் முழுமையாக தடை செய்யப்பட்டது. அதேசமயம், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளாவில் விற்கப்படும் லாட்டரி சீட்டுகளின் முடிவுகள் இணையத்தில் வெளியாகின்றன, தடையை மீறி, திண்டுக் கல், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சமூக விரோத கும்பல்கள் விற்பனை செய்து கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றன. தற்போது லாட்டரி சீட்டுகள், மூன்று நம்பர் 'ஒரு நம்பர் லாட்டரி' என்ற பெயரில், துண்டு சீட்டில் சிறப்பாக வியாபாரமாகின்றன. கூலி தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர், டெம்போ டிரைவர்கள், தள்ளுவண்டி வியாபாரிகளை குறிவைத்து, இந்த நம்பர் லாட்டரி விற்பனை கொடிகட்டி பறக்கிறது. இதற்காக திண்டுக்கல், வேலூர், திருப்பத் தூர், இராணிப்பேட்டை முழுவதும் தனி ‘நெட்வொர்க்கை உருவாக்கியிருக்கின்றனர். பெட்டிக்கடை, டீக்கடை, தள்ளுவண்டி கடை, ஜெராக்ஸ் கடை, மொபைல்போன் ரீசார்ஜ் கடைகளில், இந்த நம்பர் லாட்டரிக்கு முகவர்கள் முளைத்துள்ளனர். காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை லாட்டரி வியாபாரத்தில் ஈடுபடும் நபர்களிடம், லாட்டரி மோகத்தில் சுற்றும் பலரும் பணம் கட்டி வருகின்றனர். லாட்டரி சீட்டின் விலை ரூ.50, 100, 200, 500 என, பரிசுத் தொகைக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. பணம் கட்டியவர்களுக்கு ஒரு துண்டு சீட்டில் கடைசி 3 இலக்க எண்களை எழுதிக் கொடுக்கின்றனர். மதியம் பணத்தை கட்டி சீட்டை வாங்கினால், மாலை முடிவு தெரிந்துவிடும். ஒன்று, இரண்டு மற்றும் மூன்று எண்கள் இருந்தால் அதற்கேற்ப பரிசுத்தொகை உயர்கிறது. உதாரணத்துக்கு, 60 ரூபாய் சீட்டுக்கு ஒரு இலக்க எண் இருந்தால் 100 ரூபாய், இரு இலக்க எண்ணுக்கு 1,000 ரூபாய், மூன்று எண்களும் இருந்தால் 21ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. சீட்டு விலைக்கு ஏற்ப, பரிசுத்தொகை உயர்த்தப்படுகிறது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகை யில், “மூன்று நம்பர், ஒரு நம்பர் லாட்டரி மூலம், பலர் லட்சக் கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால், ஏழைத் தொழி லாளர்கள், தங்களது கூலிப் பணத்தை தொலைத்துவிட்டு செல்கின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு