அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி இன்று திடீர் கைது...! 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, இன்று அதிகாலை கோவையில் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். கோவை ஆர்எஸ்புரம் லாலி ரோட்டில் உள்ள கே.சி.பழனிசாமியின் வீட்டிற்கு இன்று காலை சென்ற கருமத்தம்பட்டி டிஎஸ்பி தலைமையிலான போலீசார், அவரை கைது செய்துள்ளனர்.வேனில் ஏற்றும்போது, அதிமுகவில் தன்னைச் சேர்த்துக்கொண்டதாக, தான் கூறி வருவதாக சொல்லி கைது செய்வதாக, கே.சி. பழனிசாமி தெரிவித்தார். அப்போது கே.சி.பழனிசாமியை மேலும் பேசவிடாத டிஎஸ்பி, வேனில் ஏறுமாறு முதுகைபிடித்து தள்ளி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.சூலூர் காவல் நிலையத்தில் அவர் மீது 11 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.417 - ஏமாற்றுதல்,418 - நம்பியவர்களை ஏமாற்றுதல்,419 - ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்,464 - தவறான ஆவணத்தை உருவாக்குதல் 465 - பொய் ஆவணம் உருவாக்கி ஏமாற்றுதல்,468 - ஏமாற்ற திட்டமிட்டு ஆவணம் உருவாக்குதல்,479 - சொத்து குறீயட்டை தவறாக பயன்படுத்துதல்,481 - தவறான சொத்து குறியீட்டை பயன்படுத்துதல்,482 - சொத்து குறியீட்டை தவறாக பயன்படுத்தியதற்கு தண்டணை,485 - சொத்து அடையாளத்தை உருவாக்கும் கருவியை வைத்திருந்தல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.முத்துகவுண்டன் புதூர் ஊராட்சி தலைவர் கந்தவேல் கொடுத்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாக கந்தசாமி சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.சமீபத்தில் இவர் முதல்வரை சந்தித்துப் பேசினார். அப்போது கட்சியில் மீண்டும் இணைக்கப்படுவார் என்று தகவல்கள் கூறின.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு