குமரி கோயில்களில் மாஜி டிஜிபி

தமிழக காவல்துறையின் ஒற்றை தலைமை அதிகாரியாக அருள் இருந்த காலம், தமிழக காவல்துறையின் பொற்காலம் என்ற புகழ் சொல் இன்றும் உச்சரிக்கப்படுகிறது. ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது தமிழக காவல்துறை என்ற உயர்ந்த மரியாதை அன்று இருந்தது. ஆனால் இன்று...? கடந்த 2016ம் ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையை அடுத்த செங்குன்றத்தில் மாதவராவ் என்பவரது குடோனில் சோதனை நடத்தியபோது ஒரு டைரி கிடைத்தது. அதில் யார் யாருக்கெல்லாம் குட்கா வகையில் பணம் கொடுக்கப்பட்டது என்ற கணக்கில், காவல்துறையின் உயர் அதிகாரிகளின் பெயர்களுடன், அரசியல்வாதிகளின் பெயரும் இருந்தது. இந்த தகவல் வெளிவந்ததும் ஒட்டுமொத்த அரசுத் துறையும் அதிர்ச்சி அடைந்தது. அமலாக்கத்துறையை அடுத்து , ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜார்ஜ் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் தமிழக அரசியலில் எதிர்க்கட்சி தலைவர்கள் குட்கா பற்றிய சர்ச்சையை கிளப்பினார்கள். இதில் அமைச்சர்கள் பெயரும் சேர்ந்தே ஒலித்தது. அமலாக்கத்துறையினர் நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்றும் நிலுவையில் உள்ள நிலையில் முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரனை நீதிமன்ற விசாரணைக்கு அழைக்க, அவர் தன் மகளுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. தான் மன அமைதியற்ற நிலையில் இருப்பதாலும், அதற்காக ஆலய தரிசனத்திற்கு செல்வதாலும் நேரில் ஆஜராகாமல் இருக்க வழக்கறிஞர் மூலம் விலக்கு கேட்டுள்ளார். மாஜி டிஜிபி ராஜேந்திரன் அவரது மனைவியுடன் குமரி மாவட்ட கோயில் தரிசனத்திற்கு வரும் ரகசியம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கசிந்தது. பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் சொல்லும் காக்கிகள் கூட்டத்தில் சிலரை அணுகியதும் அந்த சிதம்பர ரகசியம் உண்மைதான் என்ற தகவல் தெரியவந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்திற்கு முந்தைய தினம், ராஜேந்திரன் தம்பதியர் கன்னியாகுமரி பகவதியம்மன், மண்டைகாடு பகவதியம்மன், நாகர்கோவில் நாகராஜா கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் என தொடர்ந்து தரிசனம் செய்துகொண்டே வந்தார். பத்திரிக்கையாளர்கள் விரட்டி விரட்டி சென்றாலும் சிக்காத ராஜேந்திரன் சாமிதோப்பு அய்யாவின் தலைமைபதியில் பத்திரிக்கையாளர்களின் கண்களில் சிக்கினார். தலைமைபதிக்குள் ராஜேந்திரன், அவரது மனைவி மற்றும் அவரது உதவியாளர் இவர்களுடன் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரும், திரைப்பட இயக்குநருமான பி.சி.அன்பழகனும் உடன் சென்றதை பார்த்த பத்திரிக்கையாளர்கள் பிரச்சனைக்குரிய மாஜி அதிகாரி அதிமுகவின் அதிகாரப்பூர்வ பேச்சாளருடன் கோயிலுக்குள் சென்றதை ஆயிரம் கேள்விகளுடன் பார்த்தனர். தலைமைபதியை விட்டு மாஜியும் அவரது துணைவியாரும் கோவிலுக்கு வெளியே வருவதை பார்ப்பதற்காக ஒற்றைக்கால் கொக்குப்போல் கண்கொத்தி பாம்பாய் காத்துக் கிடந்தனர் அந்த அதிகாலை வேளையிலும். பத்திரிக்கையாளர்கள் கூட் டம் காத்து நிற்கும் செய்தியை தாமரைகுளம் காவல் நிலைய அதிகாரி மாஜியின் உதவி யாளருக்கு தகவலாக சொல்ல, தலைப்பாகையுடன் வந்த மாஜி காவல்துறை அதிகாரியும், அவரது மனைவியும் வேகவேகமாக காருக்குள் தஞ்சம் புகுந்துவிட் டார்கள்! | சாமித்தோப்பு அய்யாவின் தலைமைபதியின் இப்போதைய பொறுப்பாளர் திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் பாலஜனாதிபதியை அணுகியபோது அவர் தெரிவித் தவை : "திரைப்பட இயக்குநர் பி.சி. அன்பழகன் தன்னிடம் முன் னாள் டிஜிபி ராஜேந்திரன் அய்யாபதிக்கு வருகிறார் பணி விடை செய்து வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மாஜி அதிகாரி ராஜேந்திரனுக் கும், அவரது துணைவியாருக்கும் நெற்றியில் நாமம் இட்டு பணி விடைகள் செய்து வைத்தேன். வேறு எதுவும் நாங்கள் பேசிக் கொள்ளவில்லை” என்று கூறி ஒதுங்கிவிட்டார். மாஜி அதிகாரி ராஜேந்திரனுக் கும், அவரது துணைவியாருக்கும் நெற்றியில் நாமம் இட்டு பணி விடைகள் செய்து வைத்தேன். வேறு எதுவும் நாங்கள் பேசிக் கொள்ளவில்லை” என்று கூறி ஒதுங்கிவிட்டார். நாகர்கோவிலில் மாஜி தங்கி யிருந்த அறைக்கு குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் சென்று சந்தித்தபோது, அதிமுகவைச் சேர்ந்த நட்சத் திர பேச்சாளர் உடன் இருந் துள்ளார்.இது ஒன்றுபோதும் எதிர்க்கட்சிகளுக்கு. மேடை தோறும் பேசுவதற்கு திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு அவல் கிடைத்தது போலாகிவிட்டது என்கின்றனர். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் விஷயத்தில் யாருக்கு புண்ணியம் நடக்கப் போகிறதோ?


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்