குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடி முழக்கமிட்டால் சிறையில் அடைப்போம் என அமித்ஷா பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டங்களின்போது, தேசத்துக்கு எதிராக முழக்கமிடுபவர்களை சிறையில் அடைப்போம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மிரட்டியுள்ளார். மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டி பேசினார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், தேசத்துக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினால், அவர்களை சிறையில் அடைப்போம் என்று மிரட்டல் விடுத்தார். ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் தேசத்துக்கு எதிரான முழக்கங்களை சிலர் எழுப்பியதாகவும், அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் மிரட்டும் தொனியில் அமித்ஷா பேசியுள்ளார். ஏற்கெனவே அற வழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது அடக்குமுறை செய்து போலிஸாரையும், ராணுவத்தினரையும் விடுத்து தாக்குதல் நடத்தி வரும் பாஜக அரசு, தனது மதவாத குண்டர்களை ஏவி போராட்டக்காரர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு வித்திடும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு