சேர்மன் பதவிகளில் பாமகவை தோற்கடித்த அதிமுக..

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11ந்தேதி காலை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒன்றிய குழு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட அனைத்து கவுன்சிலர்களும் வாக்களித்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றியங்களில் 3 ஒன்றிய குழு தலைவர் பதவியை அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. வந்தவாசி, தெள்ளார், செங்கம் ஆகிய ஒன்றியங்கள் ஒதுக்கப்பட்டன. வந்தவாசி தங்களுக்கு வேண்டும்மென வந்தவாசி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகனிடம் சண்டையிட்டு வலியுறுத்தியதால் வந்தவாசிக்கு பதில் அனக்காவூர் ஒன்றியம் மாற்றி தரப்பட்டது.அனக்காவூர், தெள்ளார், செங்கம் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு பாமக தரப்பில் இன்று வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டார்கள். இதில் அனக்காவூர் ஒன்றியத்தில் மட்டும்மே பாமக வெற்றி பெற்றது. தெள்ளார், செங்கம் ஒன்றியத்தில் பாமக தோல்வியை சந்தித்தது. தெள்ளார் ஒன்றியத்தில் திமுகவிடமும், செங்கம் ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை சந்தித்துள்ளது பாமக. செங்கத்தில் திமுகவை விட அதிமுக ஓரளவு மெஜாரிட்டியாக இருந்தது. அதேபோல் தெள்ளார் ஒன்றியத்தில் அதிக மெஜாரிட்டியாக அதிமுக இருந்தது. இருந்தும் இங்கு பாமக தோல்வியடைய காரணம், அதிமுக நிர்வாகிகளும், கவுன்சிலர்களும் தான் என குற்றம்சாட்டுகின்றனர். எங்கள் சேர்மன் வேட்பாளர்களுக்கு அதிமுக கவுன்சிலர்கள் வாக்களிக்கவில்லை என குற்றம்சாட்டுகிறார்கள். இதுப்பற்றி அதிமுக தரப்பிடம் கேட்ட போது, "திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு செங்கம் ஒன்றியம் மட்டும் ஒதுக்கப்பட்டது. ஆனால் எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பாமகவுக்கு 3 ஒன்றிய சேர்மன் பதவிகளை ஒதுக்கி போட்டியிட சொன்னார்கள். இதனை எங்கள் கட்சியினர் விரும்பவில்லை. மறைமுக தேர்தலாக இருந்தாலும் பணத்தை காட்டி எதிர்தரப்பில் உள்ள கவுன்சிலர்களை இழுக்க வேண்டும், இதிலும் பாமக சேர்மன்கள் கோட்டை விட்டதோடு, இங்கும் சாதி பேசினார்கள், அதனால் தான் தோற்றுப்போனார்கள்" என்றனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)