ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல்: இன்று தொடக்கம்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங் குகிறது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர் தல் நடைபெறாத நிலையில், பல் வேறு நலத்திட்டங்கள், மத்திய அரசு திட்ட நிதிகள் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. அதனால் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வரு கிறது. இந்நிலையில் பல்வேறு தடை களுக்கு பிறகு தற்போது புதிய தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்கள் உள்ளிட்ட 10 மாவட்டங்களைத் தவிர்த்து, 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள் ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத் துவது தொடர்பாக கடந்த 7-ம் தேதி மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனி சாமி அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி அந்த 27 மாவட்டங் களில் உள்ள 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள், 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவி களுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, அந்தந்த பகுதி களைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் அலு வலர் அலுவலகங்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்கள் ஆகியவற்றில் அந்தந்த பதவிகளுக் கான இட ஒதுக்கீடு, வாக்குப்பதிவு முதற்கட்டமாக நடத்தப்படுகிறதா அல்லது 2-ம் கட்டமாக நடத்தப்படு கிறதா என்பது குறித்த விவரங்கள், அப்பதவிகளுக்கான வைப்புத் தொகை விவரங்கள், தேர்தல் நடத்தை விதிகளை முறையாக கடைபிடிப்பது உள்ளிட்ட விவரங்களை, தகவல் பல கையில் வைக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி யுள்ளது. தேர்தல் அலுவலகங்களில் வேட்புமனுக்களை வழங்கவும், பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை பெறவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங் கள் தெரிவிக்கின்றன. வேட்புமனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பெறப்பட உள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய 16-ம் தேதி கடைசி நாள். 17-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட உள்ளன. வேட்பு மனுக்களை திரும்பப்பெற 19-ம் தேதி கடைசி நாள். அந்தந்த உள்ளாட்சிப் பதவிகளுக் கான வாக்குச் சீட்டுகளை 5 வண் ணங்களில் அச்சடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற இருப்பதால், 27 மாவட்டங்களில் உள்ள 49 ஆயிரத்து 688 வாக்குச் சாவடிகளை தயார்படுத்தும் பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இத்தேர்தலில் 1 கோடியே 30 லட்சத்து 43 ஆயிரத்து 528 பெண்கள், 1 கோடியே 28 லட்சத்து 25 ஆயி ரத்து 778 ஆண்கள், 3-ம் பாலின வாக் காளர்கள் 1635 பேர் என மொத்தம் 2 கோடியே 58 லட்சத்து 70 ஆயிரத்து 941 வாக்காளர்கள் வாக்களிக்க உள் ளனர். இத்தேர்தலில் ஒரு வாக்குச் சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் வீதம் சுமார் 4 லட்சத்து 2 ஆயிரத்து 195 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணி களில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2-ம் தேதி நடைபெற உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!