ரயில் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றவர் கைது

சென்னையில், ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாக, தனியார் டிராவல்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டார். ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள ஸ்ரீ ராதாகிருஷ்ணா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் எனும் கடையில், ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ரயில்வே பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். டிக்கெட் முன்பதிவு செய்வதுபோலச் சென்று கடைக்குள் சோதனையிட்டதில், அரசின் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக, பல்வேறு மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி, ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, அவற்றை பயணிகளுக்கு அதிக விலைக்கு விற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, டிராவல்ஸ் உரிமையாளர் அஜய்குமார் தாஸ் என்பவர் கைது செய்யப்பட்டதுடன், சுமார் ஒரு லட்ச ரூபாய்க்கான ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகள் மற்றும் கணினிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு