போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நாளை விடுப்பு எடுக்கக் கூடாது..

சென்னை: மாநகர போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நாளை விடுப்பு எடுக்கக் கூடாது என போக்குவரத்து கழக இயக்குநர் சுற்றறிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து போக்குவரத்து கழக இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.சென்னையில் எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தும் நிலையில் யாருக்கும் விடுப்பில்லை. தொழிலாளர்களுக்கு நாளை வழங்கப்பட்ட விடுப்பு ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர்கள் வேறு ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக, தோழமை கட்சிகள் நாளை சென்னையில் பேரணி நடத்துகிறது. இந்த பேரணியில் கலந்து கொள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.