மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

ஷேல் மீத்தேன் திட்டத்தை ஓ.என்.ஜி.சி கைவிடுவதாக அறிவித்திருக்கிறது என்றவுடன் அனைத்து திட்டங்களுமே முடிந்துவிட்டதாக சிலர் கருதுகிறார்கள். தவறு, தவறு. அத்திட்டத்தைத் தவிர மீதி உள்ள அத்தனைத் திட்டங்களும் தொடர்கின்றன. 7000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், மூன்று சுற்றுகளாக ஏலம் விடப்பட்ட பகுதிகளில், ஹைட்ரோகாபன் கிணறுகள் அமைக்க உரிமம் பெற்ற ஓ.என்.ஜி.சி, வேதாந்தா, ஐ.ஓ.சி (இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்) ஆகிய நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க இருக்கின்றன. நெடுவாசல் மற்றும் காரைக்காலில் ஏலம் விடப்பட்ட ஹைட்ரோகார்பன் சிறிய வயல் திட்டங்கள் இன்னமும் பெட்ரோலியத் துறையால் கைவிடப்படவில்லை. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் திருவாரூர், நாகை மாவட்டங்களில் ட- II பிளாக்குகளில் 27 கிணறுகளை அமைக்க இருக்கிறது. ஓ.என்.ஜி.சி பெற்றுள்ள பெட்ரோலியச் சுரங்க உரிமத்தின் கீழ், நாகை, திருவாரூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 35 கிணறுகளை அமைக்க இருக்கிறது. மேலும், ஷேல் எரிவாயு உள்ளிட்டு, எண்ணெய் - எரிவாயு எடுக்க 110 எண்ணெய்க் கிணறுகளை சீர்காழி- மாதானம், (நாகை மாவட்டம்) முதல் பெரியபட்டினம் (இராமநாதபுரம்) வரை ஓ.என்.ஜி.சி அமைக்க இருக்கிறது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, பாபநாசம் வட்டங்களில் 39 கிராமங்களில் இரண்டாம் கட்ட பெட்ரோலிய ஆய்வுக் கிணறுகள் அமைக்கப்பட இருக்கின்றன. இப்போது களமிறங்கியிருக்கும் ஓ.என்.ஜி.சி, ஐ.ஓ.சி, வேதாந்தா மட்டுமின்றி, மேலும் பல இந்திய மற்றும் பன்னாட்டு பெரு முதலாளிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் களமிறங்க இருக்கும் அபாயம் காத்திருக்கிறது. ஆகவே, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொடர்ந்து களத்தில் நிற்க வேண்டும். காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக ஆக்கவேண்டும் என்ற கோரிக்கையையும், தமிழ்நாட்டிலிருந்து எண்ணெய் - எரிவாயு நிறுவனங்கள் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையையும் உரத்து முழங்குங்கள்! தொடர்ந்து களத்தில் நிற்போம்!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)