திருச்சி அஞ்சல்தலை சேகரிப்பாளருக்கு சிறந்த அஞ்சல்தலை சேகரிப்பு ஆர்வலர் 2019 விருது.

திருச்சிராப்பள்ளியில் மகாகவி பாராதியார் 137வது பிறந்ததின சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி அஞ்சல் கோட்டம், முதுநிலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன் சிறப்பு உறையை வெளியிட்டார் தேசியக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மாணிக்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இச்சிறப்பு உறை வெளிவர ராக்போர்ட் அஞ்சல்தலை ஆராய்ச்சி மைய நிறுவனர் ஷர்மா காரணமாக இருந்தார். அஞ்சல் தலை சேகரிப்பாளர் ஷர்மா மகாத்மா காந்தி விடுதலைப் போராட்டம் மற்றும் வாழ்க்கை வரலாறு, தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்த அஞ்சல் தலைகளை பல்வேறு தலைப்புகளில் சேகரித்து வருகிறார். அஞ்சல் தலை சேகரிப்பில் சிறப்பான ஆர்வத்தை வெளிப்படுத்துவதை தமிழ்நாடு அஞ்சல்தலை மற்றும் கையெழுத்து சேகரிப்போர் சங்கம் சார்பில் நிறுவனர் விஜயகுமார் சிறந்த அஞ்சல் தலை சேகரிப்பு ஆர்வலர் 2019 விருதினை அஞ்சல் தலை சேகரிப்பாளர் ஷர்மாவிற்கு வழங்கினார். அஞ்சல் தலை சேகரிப்பு நிலைய பொறுப்பாளர் ராஜேஷ், அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் ரகுபதி , ஜம்புநாதன், ஹாபீஸ் மதன், அமிர்தா யோக மந்திரம் யோகா ஆசிரியர் விஜயகுமார் , நாசர், தாமோதரன், ராஜேந்திரன், கமலகண்ணன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு