மணல் மாபியா போல, தண்ணீர் மாபியா அதிகரித்து வருவதாக உயர்நீதிமன்றம் வேதனை

தமிழகத்தில் மணல் மாபியா போல, தண்ணீர் மாபியா அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட கோனாம்பேடு பகுதியில் குளங்களில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கப்படுவதை தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் கடந்த ஆண்டு அக்கிராம பொது நல சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுதொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு அமல்படுத்தப்படாததால் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் மணல் மாபியா போல, தண்ணீர் மாபியா அதிகரித்து வருவதாகவும், தண்ணீரை தேக்கி வைக்க போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும், தற்போது விழித்து கொள்ளவில்லை என்றால், எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்