கோவையில் பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்

கோவையை சேர்ந்த, பிளஸ் 1 படிக்கும், 17 வயது மாணவி, நவ., 26ல், வாலிபர் ஒருவருடன், சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள பூங்காவில் இருந்து, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.ஆறு பேர் கும்பல், இருவரையும் வழிமறித்து, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று, மிரட்டி, ஆடைகளை அகற்றி, 'வீடியோ' பதிவு செய்து, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. மாணவி, பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், அனைத்து மகளிர் மேற்கு பகுதி போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரித்து, சீரநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த, 21 - 30 வயதுள்ள நான்கு ஆண்களை, நேற்று கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான மணிகண்டன் உட்பட இருவரை தேடி வருகின்றனர். தனது ஆண் நண்பருடன் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக பூங்காவிற்கு சென்ற போது இந்த கொடூர சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. தலைமறைவான 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மாணவியின் பிறந்தநாளன்று நடந்த இந்த கொடூர சம்பவம் கோவையில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானாவில் 2 இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ள நிலையில், கோவையிலும் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்