சமஸ்கிருத பாடத்திற்கு முஸ்லீம் பேராசிரியர் பாடம் நடத்த எதிர்ப்பு.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முஸ்லீம் பேராசிரியர் சமஸ்கிருத பாடம் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 16 நாட்களாக மாணவர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சமஸ்கிருத பாடத்திற்கு பெரோஸ் கான் என்பவர் துணைப் பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டதை ஆட்சேபித்து, துணைவேந்தர் இல்லம் முன்பாக 15 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். பல்கலைக் கழக நிர்வாகம் பலசுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக மாணவர்கள் தெரிவித்தனர். ஆயினும், தங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு 10 நாட்களுக்குள் நிர்வாகம் உரிய பதில் அளிக்காவிட்டால் மீண்டும் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.