செய்தியாளர் பாரதி மீது தாக்குதல் : காயல் அப்பாஸ் கண்டனம் !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. நெல்லை மாவட்டம், கடையத்தை சேர்ந்த செய்தியாளர் பாரதி செய்தியை சேகரிக்க சென்ற போது அவதூறாக பேசி தாக்குதல் நடத்திய அப்பகுதி உட்பட்ட காவல் துறை உதவி ஆய்வாளர் சின்னத்துரையை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வன்மையாக கண்டிக்கிறது. மக்கள் நலன் கருதி இரவு பகலும் பார்க்காமல் சில நேரங்களில் அவர்களின் உயிரை பணியவைத்து செய்தியை சேகரிக்கும் பத்ரிக்கையாளர்கள் மீது தொடர் தாக்குதல் நடை பெறுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது. எனவே : செய்தியாளர் பாரதி மீது தாக்குதல் நடத்திய காவல் துறை உதவி ஆய்வாளர் சின்னத்துரை மீது துறை ரீதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும், செய்தியாளர்கள் எந்த வித அச்சமின்றி சுதந்திரமாக செய்தியை சேகரிக்க தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் . ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்