திமுக கொடிக்கம்பங்கள் சாலையில் சரிந்து விழுந்ததை அடுத்து ஆள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் திமுக கொடிக்கம்பங்கள் சாலையில் சரிந்து விழுந்ததை அடுத்து ஆள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நூலகம் திறப்பு விழாவிற்கு திமுக எம்பி கனிமொழி வந்துள்ளார். அவரை வரவேற்பதற்கு வழிநெடுக சாலையின் இருபுறங்களிலும் திமுக கொடிகம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. விழா முடிந்தவுடன் திமுகவினர் கொடிக்கம்பங்கள் அகற்றாத காரணத்தினால் கொடிக்கம்பங்கள் சரிந்து சாலையில் விழத் தொடங்கின. மேலும், மின் விளக்குகள் மற்றும் மின்சார வயர்கள் பொருத்தப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள் சாலையில் சரிந்து விழுந்ததால் சாலை முழுவதும் கண்ணாடி துகள்கள் சிதறியுள்ளன. ஆபத்தை உணராமல் திமுகவினர் இதுபோன்று கொடிக்கம்பம் வைப்பது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.