அரசு மருத்துவமனையில் சமூக சேவகர் பெயரில் பணம் பறிப்பு

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சமூக சேவகர்கள் என்ற பெயரில் சிலர் பணம்பறிப்பதாக புகார் எழுந்துள்ளது. அங்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு உதவி செய்வதாகக் கூறி சுற்றி வருகின்றனர். இதுபோல நோயாளியிடம் பணம் பறித்த குமார் என்பவர் போலீசில் சிக்கியுள்ளார். நோயாளியை ஏமாற்றி பணம் பறித்ததையும், அதனை திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் அவர் கூறும் வீடியோ வெளியாகி உள்ளது. இதேபோல் சில பெண்களும் உதவி செய்வதாகக் கூறி பணம் பறித்துச் செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக சேவகர்கள் என்ற பெயரில் பணம் பறிக்கும் நபர்களை சுகாதாரத்துறை கண்டறிந்து தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.