புதுச்சேரி நகரமைப்புக் குழுமம் ,ஆன் லைன்' கட்டட அனுமதி திட்டம் ... அறிமுகம்

கட்டடம் கட்ட வேண்டும் என்றால், புதுச்சேரி நகரமைப்புக் குழுமத்தில் நேரில் சென்று விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். இந்த நடைமுறையில் தேவையற்ற காலதாமதங்கள் ஏற்படுகிறது. பல நேரங்களில், விண்ணப்பம் எந்த அதிகாரியிடம் இருக்கிறது என்பதும் தெரியாது. மேலும், பல்வேறு நடைமுறை சிக்கல்களும் உள்ளன.எனவே, 'ஆன் லைன்' மூலமாக விண்ணப்பித்து, கட்டடங்களுக்கு அனுமதி பெறும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான சாப்ட்வேரை, 'நிக்' எனப்படும் தேசிய தகவல் மையம் வடிவமைத்து தந்துள்ளது. ஆன் லைன் திட்டத்தை பரிட்சார்த்த அடிப்படையில், வீட்டு வசதித் துறை செயலர் மகேஷ் துவக்கி வைத்துள்ளார்.புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள திட்டத்தின்படி, விண்ணப்பதாரர்கள் ஆன் லைனில் விண்ணப்பித்து, கட்டட வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை 'அப் லோடு' செய்ய வேண்டும். விண்ணப்பதாரருக்கு உடனடியாக ஒப்புகை எண் வந்துவிடும். இதை வைத்துக் கொண்டு, விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது, எந்த அதிகாரியிடம் உள்ளது, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் எத்தனை நாட்கள் உள்ளது போன்ற விபரங்களை தெரிந்து கொள்ள முடியும்.அனுமதி பெறுவதற்கான கட்டணங்களையும், ஆன் லைன் மூலமாக செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மற்ற துறைகளிடம் இருந்து என்.ஓ.சி., சான்றிதழ்களையும் ஆன் லைன் மூலமாக பெற்றுக் கொள்ள முடியும்.இதுகுறித்த அனைத்து விபரங்களும் எஸ்.எம்.எஸ்., மூலமாகவும், இ - மெயில் மூலமாகவும் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும். புதிய திட்டத்தின் மூலமாக, தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்பட்டு, கட்டடங்கள் கட்டுவதற்கு உடனுக்குடன் அனுமதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரி விளக்கம் முதன்மை நகர வடிவமைப்பாளரும், கண்காணிப்பு பொறியாளருமான சத்தியமூர்த்தி கூறும்போது, 'முதல்வர், அமைச்சர், தலைமைச் செயலர் வழிகாட்டுதலுடன், ஆன் லைன் மூலமாக விண்ணப்பித்து கட்டடங்களுக்கு அனுமதி பெறும் திட்டம் பரிட்சார்த்த அடிப்படையில் துவக்கப்பட்டுள்ளது. தற்போது, அனைத்து விபரங்களும் ஆங்கிலத்தில் உள்ளது. துறை செயலர் மகேஷ் அறிவுறுத்தல்படி, ஆங்கிலத்துடன் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் விபரங்கள் இடம் பெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. https://obps.py.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்து, கட்டடங்களுக்கான அனுமதியை பெறலாம். இந்த திட்டம் குறித்த ஆலோசனைகள், கருத்துக்களை பொதுமக்கள், வரும் 30ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். நகரமைப்புக் குழுமத்தின் உறுப்பினர் செயல ருக்கு கடிதம் மூலமாகவோ, ctptcp.pon@nic.in, tcppondy@gmail.com, puducherry.ppa.ms@gmail.com உள்ளிட்ட இ மெயில் மூலமாகவோ கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம். இந்த ஆலோசனைகள் அடிப்படையில், சாப்ட்வேரில் திருத்தங்கள் செய்யப்படும். பின், ஆன் லைன் கட்டட அனுமதி திட்டம் முறைப்படி துவக்கி வைக்கப்படும். புதிய திட்டத்தில் விண்ணப்பிப்பது தொடர்பாக, பதிவு பெற்ற பொறியாளர்கள், கட்டடக் கலை வல்லுனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி முகாம், வரும் 30ம் தேதியன்று, புதுச்சேரி பொறியியல் கல்லுாரி ஆடிட்டோரியத்தில் நடக்கிறது. எதிர்காலத்தில், ஆன் லைனில் விண்ணப்பிக்கும் திட்டத்துடன், இ-டிசிஆர், ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டம் உள்ளிட்ட வைகளும் இணைக்கப்படும்' என்றார்.சீனியர் நகர வடிவமைப்பாளர் ஸ்ரீதர், புதுச்சேரி நகரமைப்புக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் கந்தர்செல்வன் உடனிருந்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்