பிரபந்தம் பாடுவதில் வடகலை - தென்கலை பிரிவினர் தள்ளுமுள்ளுகாஞ்சி கோவிலில்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று பூதத்தாழ்வார் பிறந்த நட்சத்திரத்தை ஒட்டி சாத்துமுறை சிறப்பு உற்சவம் நடைபெற்றது. அப்போது தென்கலை ஐயங்கார்கள் பிரபந்தங்களை பாட முயற்சித்தபோது, நீதிமன்ற தடை உள்ளதால், பிரபந்தங்களை பாடக்கூடாது என வடகலை ஐயங்கார்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் உருவானது. தகராறு முற்றியதால் தள்ளுமுள்ளு மற்றும் கைககலப்பில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார், மற்றும் தாசில்தார், கோவில் செயல் அலுவலர் உள்ளிட்டோர் விரைந்து சென்று சமாதானப்படுத்த முயற்சித்தனர். சன்னதியில் வைத்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கடும் வாக்குவாதம் நடைபெற்றது. மேலும் இரு தரப்பினரும் போட்டி போட்டு ஆவேசமாக பாடி சுவாமியை வழிபட்டதால் பரபரப்பு நிலவியது. ஒவ்வொரு முறையும் இதுபோல் மோதல் ஏற்படுவதாக பக்தர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு