இட்லி,தோசை மாவு வாங்கினால் தங்க நாணயம் இலவசம்

மாவு விற்பனையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் வழங்கி வருகிறார் வியாபாரி ஒருவர் மதுரை என்றால் வீரமும் கலாச்சாரமும் மட்டுமல்ல போஸ்டர் கலாச்சாரத்திற்கும் ஒரு சிறந்த நகரம் என்று சொல்லலாம் அந்த வகையில் மக்களை கவரும் வண்ணம் ஒரு வினோத போஸ்டர் கடந்த சில நாட்களாகவே மக்கள் வாய்களில் முணுமுணுக்க துவங்கியுள்ளது அந்த போஸ்டர் வேறு ஒன்றுமில்லை மாவு வாங்கினால் தங்ககாசு இப்படி ஒரு போஸ்டரைப் பார்த்தால் மக்கள் சும்மாவா இருப்பார்கள் பொதுவாக தமிழகத்தைப் பொருத்தவரை காலை பிரதான உணவாக இருக்கக்கூடிய இட்லி தோசைக்கு, வீட்டில் மாவு தயார் செய்ய ஒவ்வொருவருக்கும் வீட்டிலும் போதிய நேரம் இல்லாத நிலை தற்போது அதிக அளவில் ஏற்ப்பட்டுள்ளது. குறிப்பாக வீட்டில் மாவு அரைத்து விற்கும் பழக்கம் தென் தமிழகத்தை பொறுத்தமட்டில் மதுரையில் 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே வந்துவிட்டது என்றே சொல்லலாம். இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த மாவு கடை வியாபாரி ஒருவர் தம்முடைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மாவு வாங்கினால் அவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் வழங்கபடும் என ஒரு புது வியாபார முயற்சியை மேற்கொண்டுள்ளார். இது குறித்த விளம்பரங்கள் அடங்கிய சுவரொட்டியை மதுரையின் முக்கிய பகுதிகளிலும் ஓட்டினார். குறிப்பாக, அந்த சுவரொட்டியில் ஏற்கனவே குலுக்கல் முறையில் தங்கம் வென்ற நபர்களின் பெயர் மற்றும் முகவரியை கொடுத்து இருப்பது கூடுதல் சிறப்பு மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மாவு கடை நடத்துகிறார், இவர் மதுரையில் பல்வேறு இடங்களில் கிளை வைத்துள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் ஏதேனும் சலுகையை அறிவிக்க வேண்டும் என நினைத்து இவர் அறிவித்த திட்டம் தான் தோசை மாவு வாங்கினால் தங்கம் இலவசம் அந்த வகையில் வாடிக்கையாளர் வாங்கும் மாவுக்கு ஒரு டோக்கன் வழங்கப்படுகிறது. அந்த டோக்கன் அடிப்படையில் 10 தினங்களுக்கு ஒரு முறை குலுக்கல் முறையில் அரை கிராம் தங்க நாணயம் 10 பேருக்கு வழங்கப்படும் என சுவரொட்டி மூலம் விளம்பர செய்துள்ளார். அதேபோல் எந்தெந்த வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது என அதையும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். மாவு விற்பனையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நூதன முறையில் வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் வழங்கும் இந்த திட்டம்,மதுரை மக்களிடம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)