மேயர்: நேரடி தேர்தல் இல்லை; அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர் பதவிக்கு கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தலுக்கு அவசர சட்டம் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு மக்கள் நேரடியாக ஓட்டளித்து தேர்ந்தெடுக்கும் சட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்தார். அதன்படி, 2011ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு மக்கள் நேரடியாக தேர்வு செய்தனர். இந்நிலையில், ஜெயலலிதா கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய முறையில், மேயர் பதவியை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தலாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் கொண்டு வரும் அவசர சட்டம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது