டெங்கு காய்சலில் பலியான இளைஞரின் குடும்பத்திற்கு இழப்பிடு வழங்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. புதுகோட்டை மாவட்டம், திருவரங்குளம் , பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் என்கிற இளைஞர் கடந்த தினங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலில் பாதிக்கபட்டு அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனியின்றி உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. லோகேஸ்வரனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம். டெங்கு காய்ச்சலில் பாதிக்கபட்ட மக்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இதில் சிலர் உயிரிழந்துள்ளார் , டெங்கு காய்ச்சலை முச்சிலும் ஒழிக்க தமிழக அரசு சிறப்பு கவணம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது. எனவே : டெங்கு காய்ச்சலில் உயிரிழந்துள்ள லோகேஸ்வரன் குடும்பத்திற்கு இழப்பிடு தொகை 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் , டெங்கு கொசுவை ஒழிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் பொது மக்களுக்கு கூடுதலாக விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.