தொண்டு நிறுவனங்களின் பதிவை ரத்து செய்தது மத்திய அரசு
தன்னார்வ நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பெரும் நிதியை பாதுகாப்புக்கு எதிரான அம்சங்களுக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை மத்திய அரசு கடுமையாக்கியது. அதன்படி, தன்னார்வ நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதி, செலவிடப்பட்ட விவரம் ஆகியவற்றை வருமான வரி அறிக்கையுடன் அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டில் நாடு முழுவதும் ஆயிரத்து 807 தன்னார்வ நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் போன்றவை விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும், கணக்கு அறிக்கையை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்யவில்லை என்பதும் தெரிய வந்தது.இதையடுத்து, அந்த நிறுவங்களின் பதிவுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.விதிமுறைகளை மீறி செயல்பட்ட 1,807 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பதிவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.