பலி கேட்கும் ஊடகங்கள் ! தலை கொடுக்கும் நடிகர்கள்.!!

முதன் முதலாக தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் யார் என்று இன்றைய இளைய ஊடகவியலாளர்களிடம் கேட்டுப்பாருங்கள்,99 % பேருக்குத் தெரியாது. எம்ஜிஆர், என்.டி.ஆர் என்கிற இருவர் வென்றபின் யோகிபாபுகூட அரசியலுக்கு வரவேண்டும் என்று ஊடகங்கள் விரும்புகின்றன. காரணம்,கேமராக்களுக்கு ஒப்பனை செய்த முகங்களும்,வண்ண வண்ண உடைகளும்தான் பிடிக்கும். என்னதான் ஸ்டாலினும்,எடப்பாடியாரும்,திருமாவும், வைக்கோவும் முடிந்த வரை பளிச் என்று வந்தாலும் அவர்களைப் பற்றி மீடியாக்களிடம் அதிகம் ஸ்டாக் ஷாட்டுகள் இல்லை. தினந்தோறும் ஒரே முகத்தை காட்டவும் பார்க்கவும் அவர்களுக்கே சலிப்பாகிவிடுகிறது. கமல் சி.எம் ஆனால் எப்படி இருக்கும்,'ராஜா கைய வெச்சா ராங்கா போனதில்லே'!. என்கிற பாடல் பின்னணியில் ஒலிக்க அவர் கோட்டைக்குள் நுழைவார்.இந்த தரை நீச்சல் வீரர் எடப்பாடியாரை எப்படி கவர்ச்சியாகக் காட்ட முடியும். ரஜினி வென்றால்,இன்னும் சிறப்பு! 'எங்கிட்ட மோதாதே,நான் ராஜாதி ராஜனடா' என்று ஸ்டைலாக நடந்து வந்து,இன்னும் ஸ்டைலாகப் பேசுவார்.ஸ்டாலின், 'ஆக' என்று துவங்கும் போதே போரடிக்கவில்லையா? அதுதான் ஊடகங்கள்,வெற்றிடத்தை நிரப்பப் போவது யார் என்கின்றன. அரசியல் அறிவோ,வரலாறோ தெரிந்த ஊடகத்தலைமைகள் இல்லை.பெரும் வெற்றிடம் ஏற்பட்டு விட்டது.இப்போது இருப்பவர்கள், கோலி சிக்ஸ் அடிக்கும் போது ஜிகினா உடை அணிந்து குதிக்கும் பெண்களைப் போல எப்போதும் சிக்ஸும் , ஃபோரும் எதிர் பார்க்கிறார்கள். அறிவுள்ள,குறைந்தது தனது எதிர்காலத்தின் மீதாவது அக்கறை உள்ள ஒரு அரசியல்வாதியும் , மூக்குக்கு முன்னால் மைக்கை நீட்டியதும் நச் என்று ஒரு பஞ்ச் விட்டு கைதட்டல் வாங்குவதையும்,அடுத்த அரை மணி நேரத்தில்.அதிலிருந்து பின் வாங்குபதையும் விரும்ப மாட்டார்கள். ஆனால்,நடிகர்கள் அப்படியல்ல,அவர்கள் ஊடகங்களால் , எப்போதும் கொண்டாடப்பட்டவர்கள்.அவை தரும் புகழ் போதையால் மிதப்பில் இருப்பவர்கள். அவர்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட பிம்பங்களை உண்மை என்று நம்பும் கள் குடித்த குரங்குக இவர்கள் பலிகொண்ட நடிகர்கள் எத்தனை? என் கலை உலக வாரிசு என்று எம்ஜிஆர் சொல்லி விட்டதால்,அரசியல் வாரிசும் நீங்கள்தான் என்று பாக்கியராஜை ஏற்றி விட்டு வேடிக்கை பார்த்தவர்கள். வசூல் நாயகனாக இருந்த ராமராஜனின் வெற்றிக்குக் காரணம்,ராஜாவின் இசையும்,கவுண்டமணி காமடியும்தான் என்பது தெரிந்தும்,அவரது முதல்வர் ஆகும் ஆசையைத் தூண்டி விட்டு அவரது மந்திரி சபையில் நள்னியின் அண்ணனுக்கும் , ராஜ்கிரணுக்கும் எந்த இலாகா ஒதுக்கப்படும் என்று கிசுகிசு எழுதியவர்கள். தானுண்டு,தன் தாடியுண்டு என்று உற்சாகமாகப் படம் எடுத்து,வடதமிழகத்தில் ரஜினியைத் தாண்டி கல்லாக் கட்டிய டி.ராஜேந்தர் இவர்களை நம்பி எத்தனை கட்சிகள் ஆரம்பித்தார். அப்போதாவது வெறும் அச்சு ஊடகங்கள் என்கிற கள்ளை மட்டும் குடித்தே போதையி கிறங்க வேண்டி இருந்தது.இன்றைய நடிகர்கள் அந்தக் கள்ளின் போதையில் இருப்பது போதாதென காட்சி ஊடகக் தேள்களாலும் கொட்டப்பட்டு குதித்து குதித்து ஆடுகிறார்கள். வெற்றிடம் பொது வெளியில் இல்லை,ஊடகங்களின் நியூஸ் ரூமுக்குள்தான் இருக்கிறது.வீனாய் புகழ் போதையில் பலியாகாதீர்கள். அருகி வரும் இனத்தை சேர்ந்த நேர்மையான ஊடகத்துறை நண்பர்கள் மன்னிக்க. ரூபன் ஜெய்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)