சோனியா பாதுகாப்பு வாபஸ்: மத்திய அரசு உறுதி

சோனியா குடும்பத்திற்கு பாதுகாப்பு வாபஸ் பெற்ற விவகாரம் முடிந்து போன ஒன்று எனவும், இந்த முடிவிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை எனவும் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அளிக்கப்பட்டு வந்த, எஸ்.பி.ஜி., எனப்படும், சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பை, சமீபத்தில் மத்திய அரசு விலக்கியது. சோனியா குடும்பத்திற்கு உள்ள அச்சுறுத்தலை ஆய்வு செய்த பிறகு தான், பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது. இந்த விவகாரத்தில் நேற்று(நவ.,19) லோக்சபாவில் அமளி ஏற்பட்டது. இந்நிலையில், இன்று ராஜ்யசபாவில், இந்த விவகாரத்தை எழுப்பி, காங்கிரஸ் எம்.பி., ஆனந்த் சர்மா பேசுகையில், சோனியா குடும்பத்திற்கும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் மத்திய அரசு எஸ்பிஜி பாதுகாப்பை திரும்ப பெற்றுள்ளது. அந்த பாதுகாப்பை மீண்டும் திரும்ப வழங்க வேண்டும். சோனியா குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. சோனியா, ராகுல், பிரியங்கா, மன்மோகன் சிங் ஆகியோரின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. பிரிவினைவாத அரசியலை தாண்டி எஸ்பிஜி பாதுகாப்பை மீண்டும் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். தேசிய நலன் கருதி, இதை மத்திய அரசு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மத்திய அரசின் நோக்கம் இன்றும், நாளையும் கேள்விக்குள்ளாகும்.ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக சோனியா உள்ளார். 10 ஆண்டுக்கும் மேலாக மன்மோகன் சிங் ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். இவர்களுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு அவசியமானது. அரசின் கடமை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது, முன்னாள் பிரதமர்களின் பாதுகாப்பை திரும்ப பெறுவது குறித்து காங்கிரஸ் பேசியது இல்லை. இவ்வாறு அவர் பேசினார். அப்போது அவையில் இருந்த பா.ஜ., செயல் தலைவர் ஜேபி நட்டா பேசுகையில், சோனியா குடும்பத்தினரின் பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெறவில்லை. இதில் அரசியல் ஏதும் இல்லை. உள்துறை அமைச்சகத்திற்கு என சில வழிமுறைகளும், விதிமுறைகளும் உள்ளன. பாதுகாப்பு வாபஸ் என்ற முடிவை அரசியல்வாதி எடுக்கவில்லை. இதனை அரசியல்வாதி செய்யவில்லை. ஒருவருக்கு உள்ள அச்சுறுத்தல் அடிப்படையில் பாதுகாப்பு அளிப்பது அல்லது திரும்ப பெறுவது என்ற முடிவை உள்துறை அமைச்சகம் தான் முடிவு எடுக்கிறது. பாதுகாப்பு திரும்ப பெற்றதில் அரசியல் இல்லை. என்றார். சோனியா பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், சோனியா பாதுகாப்பு வாபஸ் விவகாரம் முடிந்து போன ஒன்று. முடிவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் தொடர்ந்து இது குறித்து கேட்கலாம் என தெரிவித்தன. பா.ஜ., எம்.பி., சுப்ரமணியன்சுவாமி பேசுகையில், சோனியா குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை மத்திய அரசு ஆய்வு செய்யாமல் திரும்ப பெறவில்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு குழு கூடி இந்த விஷயத்தை பல முறை ஆலோசித்து தான் முடிவு எடுத்துள்ளது. சோனியா குடும்பத்திற்கு எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெற்றதை எதிர்ப்பவர்கள் தாராளமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!