கட்டிட தொழிலாளியின் நேர்மை - பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 16.10.2019-ம் தேதியன்று இருசக்கர வாகனத்தில் சென்ற திருமங்கலத்தை சேர்ந்த சின்னச்சாமி என்பவருக்கு விபத்து ஏற்பட்டு சிறு காயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது அவ்வழியாக வந்த கிரியக்கவுண்டன்பட்டியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி அவரது மனைவி பாண்டியம்மாள் அவ்விடத்திலிருந்து 6 பவுண் தங்க செயின், செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை கண்டெடுத்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்களின் நேர்மையையும், கடமை உணர்வையும் பாராட்டி 17.10.2019-ம் தேதியன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன். இ.கா.ப., அவர்கள் தட்சிணாமூர்த்தி மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாளை நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழும், பண வெகுமதியும் வழங்கி கௌவுரவித்தார். மேலும், பணப்பையை தவறவிட்ட திருமங்கலத்தை சேர்ந்த சின்னச்சாமியை நேரில் அழைத்து பணப்பையை ஒப்படைத்தனர்.